ஜீவ மார்க்கம் South Gate, California, USA 62-0621B 1நன்றி,சகோ. பார்டஸ் (Borders). உங்களுக்கு தெரியும், மக்கள் மத்தியில் இருப்பது அது அருமையான சிலாக்கியமாய் இருக்கிறது. மேலும் முதல் முறையாக யூத ஜெப வீட்டில் (Synagogue) இருப்பது,அது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக இருக்கிறது. இந்த சுருள்களின் ஒழுங்கு முறைகளையும் எப்படியாக அவை பாதுகாக்கப்படுகிறதென்றும், இன்னும் அநேக காரியங்களையும் அறிந்து கொள்ளமுடிகிறது. மேலும் இங்கு வந்து இந்த தேவாலயத்தில் யூதர்களோடு ஒரு சுகமளிக்கும்ஆராதனையை நடத்துவது ஒரு அருமையான நேரமாயிருக்கும். நன்றி சகோதரனே,மிக்க நன்றி. நான் எப்பொழுதும் யூத மக்களைக் குறித்து ஒரு உணர்வை பெற்றவனாயிருக்கிறேன். ஒருவேளை இக்காலையில் இங்கு யாரும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களைக் குறித்ததான உணர்வு எனக்கு எப்பொழுதும் உண்டு. யூதர்கள் புறஜாதிகளுக்கு செய்தியை கொடுத்தது போல,என்றாவது ஒரு நாளில் புறஜாதி சபையும்யூதர்களுக்கு செய்தியை கொண்டு செல்லும் என்று நான் விசுவாசிக்கிறேன். எனவே அதுதாமே யூதர்களுக்கு முழுமையாக சென்றடையும் போது, கவனியுங்கள்; புறஜாதி கதவானது மூடப்பட்டு,அது யூதர்களுடையதாயிருக்கும். ஆகவே இப்பொழுது இதுதாமே நேரமாயிருக்கிறது. இப்பொழுது இங்கே உள்ளே இருப்பதில் நான் மிகவும் சந்தோஷமடைகிறேன். 2தேவன் இந்த தயவுள்ள சிறிய மனிதர், சகோதரன் மைக்கல்சனை (Michaelson) ஆசீர்வதிப்பாராக.என் ஜீவியத்தில் நான் அவரை பார்த்ததேயில்லை. அவர் இங்கே நின்றுகொண்டு இருந்தாரா என்பதையும் நான் அறியேன். ஒருவேளை அவர் கூட்டத்தார் மத்தியில் இருந்தும் நான் அதை அறியாமலிருந்திருக்கலாம்.ஆனால் நான் அவருடைய நிகழ்ச்சியை கேட்டிருக்கிறேன். இப்பொழுது தேவனுடைய சேவைக்காக தன்னுடைய ஜீவனை கொடுத்திருக்கிற அந்த எளிமையான சிறிய யூதனும், தேவனுடைய மகத்தான ஊழியக்காரனுமாகிய அவரை நான் பாராட்டுகிறேன். 'என் இயேசுவே“, ஆமாம்,'என் இயேசுவே”என்று அவர் கூறிய விதத்தை நான் விரும்புகிறேன்.ஒரு யூதன் அவ்விதமாகக் கூறுவதை நினைக்கும்போது அது அவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது. நிச்சயமாகவே இங்கு அமெரிக்காவில் இந்த தேசமெங்கும் இருக்கிற யூத மக்களுக்கு அவர் ஒரு தீ பந்தத்தை ஏந்திச் (Torch bearer) செல்கிறவராய் இருக்கிறார்.என்னுடைய உத்தமமான ஜெபம் என்னவெனில், தேவனே கூடுமானால் இயேசு வரும் வரைக்கும் அதை அவர் பிடித்துக் கொண்டிருக்கும்படிக்கு அவருடைய பெலவீனமான, வயதான கரங்களுக்கு பெலத்தை கொடுத்தருளும்.அவரை நான் மெச்சுகிறேன். நல்ல போராட்டத்தைப் போராடின வயதான புருஷர்களை நான் மெச்சுகிறேன். என்னுடைய கூட்டாளிகளில் ஒருவரான டாக்டர். 3F.F. பாஸ்வர்த்தை நினைவு கூறுங்கள். எண்பத்திநான்கு வயதான அவரை நான் பார்க்க உள்ளே சென்றபோது அவருடைய சிறிய வயதான கரங்கள் வெளிப்பக்கத்தில் இவ்விதமாக இருந்தது. அங்கே எண்பதாவதுவயதில் என்னுடன் காடுகளில் அயல்நாட்டு ஊழியம் செய்துவிட்டு அப்பொழுதுதான் அவர்கள் ஆப்பிரிக்கா தேசத்திலிருந்து வந்திருந்தார்கள். நான் அவரிடத்தில் ஓடிச் சென்று என்னுடைய கரங்களைக்கொண்டு அவரை அணைத்தேன். எனக்கு தெரியும் அவர் மரித்துக் கொண்டிருக்கிறார் என்று. நான்,''என் தகப்பனே,என் தகப்பனே,இஸ்ரவேலின் இரதமும், குதிரை வீரருமானவரே“என்று உரக்க சத்தமிட்டேன். அவர் ஒரு தீரமுள்ள (gallant) மனிதர். அவர்;,''சகோதரன் பிரான்ஹாம், இதுதான் என் வாழ்நாட்களிலேயே மிகவும் சந்தோஷமான நேரம்;”, என்றார். நான், ''நீங்கள் மரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?“என்றேன். அவர்;, ''நான் மரிக்கமுடியாது. நான் ஏற்கனவே அறுபது வருடங்களுக்கு முன்னமே மரித்துவிட்டேன். நான் எதற்காக ஜீவித்தேனோ அதை காணும்படிக்கும் மற்றும் அவர் அந்த கதவண்டையில் வந்து அவருடைய வீட்டிற்கு என்னை அழைத்து செல்லும்படிக்கும் காத்திருக்கிறேன்“,என்றார். ''அது தான் வழி” என்றும் கூறினார். பின்னர் நான்; நினைவுகூர்ந்தேன், எல்லா மகத்தான மனிதர்களின் ஜீவியம் நமக்கு நினைப்பூட்டுகிறது, எப்படியெனில் நாம் நம்முடைய ஜீவியத்தை சிறப்பானதாக்கி, மரித்து, பிரிந்து சென்றபின் காலமென்னும் மணலின் மேல் நம்முடைய அடிச்சுவடுகளை விட்டுச் செல்வோம். அது உண்மை. (யாரோஒருவர் சகோதரர், பிரான்ஹாமிடத்தில் பேசுகிறார்). ஆம்? (அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்) அவர் (சகோ. பாஸ்வர்த்) அங்கு நின்றிருந்தவர்களோடு கூட கைகுலுக்கினார் என்று நான் கேள்விப்பட்டேன். (அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்) ஆம், ஐயா,ஆம், ஆம். அதை நான் கேள்விப்பட்டேன். அவையாவும் சரிதான், சகோதரர். கோப் (Kopp)அதை நீர் எனக்கு நினைவுப்படுத்தினபடியால் நான் சந்தோஷப்படுகிறேன். ஆம், மரிப்பதற்கு சற்று முன் அவர் எழுந்து தன் ஊழியத்தின் மூலமாக கிறிஸ்துவண்டையில் வந்து மனமாற்றம் அடைந்தவர்களிடம் சென்று நீண்ட நேரம் கைகுலுக்கியபின், தன் ஆவியைவிட்டு, அவர்களோடு இருக்கும்படியாக சென்றுவிட்டார்என்று அவர்கள் கூறினார்கள். எப்பேற்ப்பட்ட தீரமுள்ள மனிதர். அப்படிப்பட்ட காரியங்களை நான் நேசிக்கிறேன். 4சகோதரர்களே, இந்த அருமையான ஐக்கியத்தாரோடு கூட்டத்தை நடத்தும்படிக்கு, இங்கே லாஸ் ஏஞ்சலிஸ் அல்லது தெற்குவாசலில் (அது என்னவாக அழைக்கப்பட்டாலும்) இருப்பது பெரும் சிலாக்கியமாயிருக்கிறது.அது... நீங்கள் எனக்கு கொடுத்த அழைப்பாயிருக்கிறது. எனக்கு இங்கே வரவேண்டும் என்ற ஒருவிதமான இழுப்பு இல்லாத பட்சத்தில் நான் இங்கே வந்திருக்கமுடியாது. எல்லாவற்றுக்கும் நேரிடுவது போல் நானும் என்னுடைய ஊழியமும் கிட்டத்தட்டஒரு பலப்பரீட்சைக்கு (showdown) வந்துவிட்டதென்று உணர்கிறேன். நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசியென்றும் இன்னும் எல்லாவற்றையும், மற்றும் உலகத்தார்களும்,ஸ்தாபனங்களும் பேசப்படும் பேச்சுகளை என் மேல் அவர்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். அது வருமென்று நான் எதிர்பார்த்திருந்தேன். இப்பொழுது வந்தது போல அது முன்னமே வரவில்லையே என்று நான் ஆச்சரியப்படுகிறேன். ஆனால் அது இன்னுமாக மோசமாக ஆகும் என்றும் நான் எதிர்பார்க்கிறேன். மேலும் சகோதரர்களே, என்னுடைய சோதனையான மற்றும் மிகவும் ஆழமான துயர நேரங்களில் நான் கடந்து போவதை நீங்கள் அறிந்துகொள்ளும்போது, உங்கள் கரங்களை விரித்து ஒத்துழைப்பை எனக்கு கொடுங்கள். நான் உங்களை மெச்சுகிறேன், கர்த்தர்உங்களை ஆசீர்வதிப்பாராக. எனக்கு தெரிந்த ஒவ்வொன்றையும் எப்படியெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்து; உங்கள் சபைகளை பெலப்படுத்தி,சகோதரர்களை ஒருமனப்பாட்டில் இணைக்கவே நான் இங்கே இருக்கிறேன். அது தான் என் நோக்கமாயிருக்கிறது. நான் ஏற்கனவே நேற்று இரவுகூறினபடி, ஒவ்வொரு மூலையிலும் வலையை போட்டு ஒவ்வொரு சிறிய மீளையும் தேவனுடைய இராஜ்யத்திற்காக பிடிக்க விரும்புகிறேன். 5நேற்றைய இரவு நான் காலதாமதமாக வந்தேன், எனவே, நாம் காலதாமதமாக துவங்கினோம். கிட்டத்தட்டநான் எப்பொழுதும் தாமதமாக வருகிறவனாயிருக்கிறேன். நான் ஒரு முழுமையான ஒன்பது மாத குழந்தையாக (நிறைமாத) இருந்தும்; இங்கே காலதாமதமாக வந்தேனென்றும் (பிறந்தெனென்றும்) என் தாயார் என்னிடத்தில் கூறினார்கள்.நான் வெறுமனே ஐந்து பவுண்ட் எடைகொண்டவனாக பிறந்தேன், என்னுடைய துவக்கமும் சரியில்லை,மற்றும் உயர்ந்த நிலையையும் நான் அடையவில்லை.என்னுடைய திருமணத்துக்கும் காலதாமதமாக வந்தேன். என்னுடைய மனைவியை நீண்ட நேரம் காக்கவைத்தேன். அது (என் வாழ்வில்) எப்போதும் காத்துக்கொண்டிருப்பதும், காலதாமதமாகவும் இருந்தது. எனவே,என்னுடைய சவ அடக்கத்திற்கும் (funeral) நான் காலதாமதமாய் இருப்பேனாகில் அது நன்றாயிருக்கும். அது சரிதான். அவர்கள் (சகோதரர்கள்)எவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருக்க முடியுமோ அவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருக்கட்டும், ஏனெனில் நானும் என்னால் முடிந்த மட்டும் அவ்வளவு அதிகமான நேரம் சுவிசேஷத்தை பிரசங்கித்து என்னுடைய சகோதரர்களோடு ஐக்கியம் கொள்ளவும்விரும்புகிறேன். எனவே, இப்பொழுதுஇன்றிரவு சற்று துரிதமாக போக விரும்புகிறேன். 6இப்பொழுது, இங்கே ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள் என்று நான் அறிந்து கொள்கிறேன். இங்கே நான் தூண்டிலை போட முயன்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது அங்கே பாவிகள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒருவேளை நீங்கள் ஆச்சரியப்படலாம். ஏன் நான் பீட அழைப்பை கொடுக்கவில்லை என்று. முதலாவது காரியம், நான் காலதாமதமாக வந்தேன் என்று நான்உணர்கிறேன், அது மக்களை சோர்வடையவும் இன்னும் அது போன்ற காரியங்களையும் செய்யும். ஆனால் இருதயத்தை பகுத்தறிதல் (discernment) அல்லதுவேறு ஏதோ காரியத்தின் மூலமாக வெறுமனெ ஒரு சிறிய தூண்டிலை போடும்போது அது அவர்களை கவரச் செய்யும். அதன் பிறகு நீங்கள் வலையைவிரித்து அவர்களை உள்ளே கொண்டுவரலாம். எனவே இப்பொழுது நீங்கள் என்னோடு சற்று பொறுத்துக்கொள்ளுங்கள். ஆவியானவர் எவ்விதமாக போக வழி நடத்துகிறாரோ அவ்விதமே நான் போகிறேன் என்றுநான் நினைக்கிறேன். எனவே, இப்பொழுதுஇரட்சிக்கப்படவும், பரிசுத்தஆவியினால் நிரப்பப்படவும் வேண்டும் என்றிருக்கிறவர்களை நாங்கள் வலைக்குள் கொண்டுவரும்போது, சகோதரர்களே,உங்களுக்கு தெரியும் அவர்கள் எந்த மாவட்டத்தைசேர்ந்தவர்கள் என்று. அவர்களை பிரசங்கபீடத்தண்டை கொண்டு வருவதைதான் எங்களால் செய்யமுடியும்.அதன் பிறகு, அங்கிருந்து அவர்களை மற்ற காரியங்களுக்கு நீங்கள் கொண்டு செல்லுங்கள்.அவர்களை உள்ளே கொண்டு வந்து, ஞானஸ்நானம் கொடுத்து, அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளும் வரை அவர்களோடு தரித்திருங்கள். சூரியன் மேற்கில்மறைந்து, சாயங்கால வெளிச்சமானது பிரகாசிக்க தொடங்கும் இந்த கொடிய இருளான மணி வேளையில் இங்கே நாம் இருப்பதும் அதற்காகத்தான். 7...அது இரகசியமானதாக இல்லை; நீங்கள் எல்லோரும் என்னுடைய ஒலி நாடாக்களை (Tapes) வைத்திருக்கிறீர்கள்,எல்லோருமே, ஆனால், அங்கே வெளியே மக்கள் மத்தியில் இருக்கும்போது,பிரான்ஹாம் கூடாரத்தில் செய்வது போல வேதத்திலுள்ள ஆழமான உபதேசங்களையோ அல்லது ஊழியக்காரர்கள் கொண்டு சென்று தியானிக்கக்கூடிய ஒலிநாடாக்களில் கூறப்பட்ட காரியங்களையோ அவர்களிடத்தில் அணுகுவதில்லை. இக் காலையில் அந்த பழமையான தேசத்திலிருந்து வந்திருந்த ஒரு கிரேக்கரை சந்திக்க நேர்ந்தது, அவரிடத்தில் ஆறுமணி நேரம் ஓடக்கூடிய ''வித்து என்பதான வார்த்தை“ (Seedword) என்னும் என்னுடைய ஒலிநாடா இருந்தது. அதை அவர் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக படித்து, பின்பு அவைகளை எடுத்து, ஆராய்ந்து பார்த்து,அதை கிரேக்க மொழியுடன் ஒப்பிட்டு பார்த்தபோது, அது அவ்வாறே ஒருமித்து போகிறதென்றும் (அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது) அதை எப்படியாக அவர் எடுத்துக் காண்பித்தார் என்றும் என்னிடத்தில் கூறிக்கொண்டிருந்தார். அது தியானிக்கப் படவேண்டியதாயிருக்கிறது. இங்கே நாம் மீனை பிடிக்க முயன்று கொண்டிருக்கிறோம். இது தான் அது. அங்கே வெளியே நாம் தூண்டிலில் வைக்கப்பட்ட இரையை போடுகிறோம், தூண்டிலையோமீனுக்கு காண்பிப்பதில்லை. நீங்கள் இரையை மட்டுமே காண்பிக்கிறீர்கள். அது இரையை கவ்விப்பிடித்து, தூண்டிலில் மாட்டிக் கொள்கிறது. எனவே பெரும்பாலும் வியாதியஸ்தர்களுக்காகவும் மற்ற காரியங்களுக்காகவும் நான் ஜெபிப்பது, பாவியின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே இருக்கிறது. அது (தூண்டிலில் வைக்கப்பட்ட) இரையாக இருக்கிறது. எனவே, சுவிசேஷ தூண்டிலை, அதற்காக நீங்கள் உபயோகிக்கிறீர்கள். அவனுக்கு முன்பாக இரையை மட்டும் அசைத்து காட்டுவேன். பாருங்கள். எனவே நீங்கள் தூண்டிலை உபயோகிக்க வேண்டியதாயிருக்கிறது. 8மேலும் இன்றிரவு எங்களுடைய பேச்சை இன்னும் சற்று குறைத்துக் கொள்ள நான் முயற்சிக்கிறேன். சகோதரர் பார்டர்ஸ் (Borders) உள்ளே வந்து நான் பேசுவதற்கு முன் அவர் சற்று பேசுவார். நானும் என் பேச்சை... இருக்க முயற்சிக்கிறேன். அவை சாதாரண பேச்சாக இருப்பதினால், சகோதரர்களாகிய உங்களுக்கு அது சிறு பிள்ளைத்தனமாக (Jurenile) இருக்கும். நீங்கள் எல்லோரும் போதகர்களாயிருக்கிறீர்கள், ஆனால் நான் ஒரு போதகன் கிடையாது. ஆனால் நாம் தேவனுடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கையில், என்னுடைய நோக்கமானது தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உதவவும், உங்கள் சபைகளை பெலப்படுத்தவும், சகோதரர்கள் மத்தியில் சகோதரத்துவத்தை பெலப்படுத்தவும் முயற்சிப்பதாய் இருக்கும். அதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் சிலர் இங்கே இருக்கிறார்கள். ஜெபர்சன்வில்லிலிருந்து வந்திருக்கும் சகோதரன். சாத்மன் (Sothmann), உண்மையில்அவர் ஒரு கனடா தேசத்தார்; சகோதரன்.டாம் (Tom), அவர் கூட ஒரு கனடா தேசத்தார்,இம்மணி வேளையில் எங்களோடு கூட ஜெபர்சன்வில்லில் தற்காலிகமாக வசிக்கிறார்கள். டிஃப்டன், ஜியார்ஜியாவிலிருந்து வரும் சகோதரன்.வெல்ச் இவான்ஸ் இவரும் எங்களோடு தற்காலிகமாக தங்கியிருக்கிறார். இவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான் சுவிசேஷத்தை பிரசங்கிப்பதை கேட்பதற்காக ஆயிரத்து ஐநூறு மைல்கள் வாகனத்தை ஓட்டி வருகிறார். இப்பொழுது, சகோதரர் நார்மன், சகோதரி நார்மன்,சகோதரி. இவான்ஸ்,மற்றும் சகோதரன் வில்லி ஆகியோர் இருக்கிறார்கள்.அங்கே சிறு கூட்டமாக வசிக்கும் இந்த சிறு குழுவானது தொடர்ந்து நாம் ஊழியத்தில் போகும்படிக்கு நம்மோடு கூட ஜெபிக்கவும், நம்மை பெலப்படுத்தவும் இங்கே நம்முடன் வந்திருக்கிறார்கள். நம்முடன் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர்கள் வந்திருப்பதற்காக நாம் சந்தோஷமடைகிறோம். 9இப்பொழுது, இந்த கூட்டத்தில் உட்கார்ந்திருந்தபோது வெறுமனே மக்களை சந்தித்ததான ஒரு புத்தகம் நம்மிடத்திலிருந்ததை நான் கவனித்தேன். இப்பொழுது நமக்கிருக்கும் சிரமம் ஸ்தாபன சகோதரர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே... நீங்கள் எல்லோரும் ஸ்தாபன சகோதரர்களாயிருக்கிறீர்கள். இருப்பினும், இந்த பிரசங்க பீடத்திலிருந்து இக்காலையில் என்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். சகோதரர்களே, உங்களுக்கு தெரியும்,உங்கள் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு காரியத்தை நீங்கள் ஒரு வழியில் கூறும்போது; அதைஒருவர் வேறொரு வழியில் எடுத்துக் கொண்டு, அந்த வழியில் அதின்மேல் சார்ந்து கொள்ள துவங்குகிறார். அதை அவர் இன்னொருவருக்கு கூறுகிறார், அந்த இன்னொருவர் மற்றொருவருக்கு கூறுகிறார். உங்களுக்கு தெரியுமா, முதலாவது நடக்கும் காரியம் என்னவெனில், அது முழுவதும் அதினுடைய தேவையை சந்திக்காமல் போகிறது. எனவே அதை ஒருவர் இந்த வழியில் சார்ந்துகொண்டு,வேறொரு வழியில் அதை எடுத்துக் கொள்கின்றனர். அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எனவே சகோதரர்களே அவ்விதமாய் அநேக காரியங்கள் என்னைப் பற்றி கூறப்பட்டதை அப்படியே சிலர் எடுத்துக் கொண்டு, தவறாகப்புரிந்து கொண்டு, வழிதவறிப் போய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். 10நிச்சயமாக, ஸ்தாபனத்துக்கு அவ்வளவு விரோதமாயிருக்கிறோம் என்பது கிடையாது. என்னுடைய சகோதரர்கள் அங்கிருக்கிறார்கள். அது இவ்விதமாயிருக்கிறது, எப்படியெனில் இன்றைக்கு அநேக மக்கள் ஸ்தாபனத்தை சார்ந்திருக்கிறார்கள். இப்பொழுது இங்கே யுனைடெட் சகோதரர்கள் (United Brethren) சபையிலிருந்து வந்த ஒரு சகோதரன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் மற்றும் அநேக இடங்களிலிருந்தும் வந்திருக்கிறார்கள். நீங்கள் மூடியை இன்னும் சற்று விலக்கி, வாசலை திறந்து கொடுத்து, யாக்கோபுவெட்டின மூன்றாவது துரவில் பருகி, (அதற்குஅர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியும்) ஐக்கியத்தை கொண்டிருக்கும் வரைக்கும் அப்படிப்பட்ட ஸ்தாபனங்கள் எல்லாம் சரிதான்;. ஆனால் 'ஸ்தாபனத்தை சேர்ந்து கொண்டிருப்பது' அதுதான் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்று நீங்கள் வரும்போது, இல்லை சகோதரர்களே, அதைக்காட்டிலும் இன்னும் அதிகமானது இருக்கிறது. இங்கே நம் மத்தியில் ஒரு அருமையான வரலாற்று ஆசிரியர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்,மேலும் நமக்கு தெரியும் சபையானது ''நாம்தான் அது“ என்ற ஸ்தாபன கோடு போட்டு பிரித்து கொள்ளும் மாத்திரத்தில் உடனே தேவன் அவர்களைவிட்டு பிரிந்துபோகிறார், அதற்குபின் அவர்கள் மரித்து எழுப்புதலை அடையாமல் போகிறார்கள். பாருங்கள். ஒரு சபையானது விழுந்து போய் மறுபடியும் எழுந்ததாக வரலாறே இல்லை. அது முடியாது. 11நான் முதன் முதல் இந்த ஊழியத்திற்கு வந்தபோது, ஐக்கிய பெந்தெகோஸ்தே சபையின் (United Pentecostal church) சகோதரர்களாகிய நீங்கள் தான் முதலாவது எனக்கு உங்கள் கதவை திறந்து கொடுத்தீர்கள். அவர்கள் சகோதரன் ரிச்சர்ட் ரீட் (Richard reed), சகோதரன் ஜாக் மூர் (Jack Moore), மற்றும் சகோதரன் பென் பெம்பர்டன் (Ben Pemberton), மற்றும் செயின்ட் லூய்யில் (Saint Louis) தான் என் முதல் கூட்டம். நான் கலந்து கொண்ட முதல் கூட்டமும், மற்றும் அதைக் குறித்து அறிந்து கொள்ளசெய்ததும் அதுவே. அது தாமே உலக பெந்தெகொஸ்தே ஐக்கியமும் (P.A of W - Pentecostal Associations of the World), இயேசு கிறிஸ்துவின் பெந்தெகொஸ்து ஐக்கியமாயிருக்கிறது (P.A of J.C - Pentecostal Associations of the Jesus Christ). அது தாமே மிஷவாகாவில், சகோதரர் ரியால் (Ryall) கீழாக ஒன்று சேர்த்து இணைக்கப்படுவதற்கு முன் அவ்விதமாய் இருந்தது. நான் அப்பேற்பட்ட அருமையான சகோதர ஐக்கியத்தை அது வரை பார்த்ததேயில்லை. நல்லது, பெந்தெகொஸ்தே என்றால் இதுதான் என்று பெந்தெகொஸ்தைப் பற்றி எண்ணியிருந்தேன். ஆனால் வெவ்வேறு குழுக்கள் சுற்றிலும் எங்கும் இருக்கிறதென்றும், அதில் ஒவ்வொன்றிலும் அருமையான மக்கள் இருக்கிறார்கள் என்றும் அறிந்து கொண்டேன். எனவே, நாம் தொடர்ந்து சகோதரர்களாய் இருக்கும் பட்சத்தில் அவர்கள் விசுவாசம் என்னவாக இருந்தாலும், நான் என் கரங்களை நீட்டினபடி இடைவெளியில் நிற்க முயன்று, ஒவ்வொரு சகோதரனையும் ஐக்கியத்தின் ஒருமைப்பாட்டிற்குள் கொண்டுவரும்படிக்கு அழைக்க முயல்வேன், அப்பொழுது நமக்குள் ஒரு புரிந்து கொள்ளுதல் ஏற்படும். காரணம் நிச்சயமாக என்னை நான் முன் வைக்கும்பட்சத்தில், இக்காலையில் தேவன் தாமே என் முகத்துக்கு நேராக தன் விரலை நீட்டி, அநேக குறைகளை சுட்டிக்காண்பித்து, ''வாலிபனே, உன்னை நீ பரிபூரணன் என்று எண்ணிக்கொள்வதிலிருந்து நீ வெகு தொலைவில் இருக்கிறாய்“, என்பார். எனவே அவ்விதமாகத்தான் நான் ஒவ்வொருவரையும் எண்ணி, அவர்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறேன். இப்பொழுது, ஐக்கியத்தின் ஒற்றுமையை பெற்றிருப்பது, அதுதான் என்னுடைய நோக்கமாயிருக்கிறது. தேவன் உங்களை என்றென்றும் ஆசீர்வதிப்பாராக. 12இவை எல்லாவற்றிற்கு மத்தியிலும், ஒரு சில நிமிடங்களுக்கு முன் நான் கூற துவங்கினபோது, இன்னும் நூற்றுக்கணக்கான இடங்களிலிருந்தும், மிஷனரி ஸ்தாபனங்களிலிருந்தும் எனக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது, எனக்கு சுவிசேஷ பயணம் இருக்கிறது. இந்த தேசத்தை கடந்து போய்க்கொண்டிருக்கிறேன். இதை நான் முடித்த உடனே சுவிசேஷ பயணமாக (Missionary Trip) அயல் நாடுகளுக்கு செல்ல இருக்கிறேன். தேவனிடத்திலிருந்து ஏதோ காரியத்தை எதிர்பார்த்து, அதை விவரித்து கூறுவதற்கும் நேரமில்லாத பட்சத்தில், எனக்கு நானே முயன்று கொண்டிருக்கிறேன்,காரணம் நாம்; நினைப்பதைக் காட்டிலும் கிறிஸ்துவின் வருகை நெருக்கமாயிருக்கிறது. அது வாசலண்டை (அவ்வளவு சமீபமாக) வந்திருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன், அதை நினைக்கையில், உண்மையிலேயே அது என்னை நடுக்கமடையச்செய்கிறது. என்னைக் குறித்து நான் நடுக்கமடையவில்லை, ஆனால் இதை நினைக்கையில் நான் நடுக்கமடைகிறேன்: அதென்னவெனில் நான் செய்ய வேண்டிய சிறப்பானதை செய்திருக்கிறேனா? நான் தேவனுடைய இராஜ்ஜியத்திற் கென்று கொடுக்கத்தக்கதாக இன்னும் ஒரு சிறிதளவு காரியம் என்னிடத்தில் இருக்கிறதா? இன்னும் நான் செய்யக்கூடிய காரியம் ஏதாவது உண்டா? ஏனெனில் தேவனுக்காக செய்யக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று எப்போதாகிலும் நமக்கு இருக்குமானால் அது இதுவே. அது சரியாக இப்பொழுது மாத்திரமே. 13நான் சபையை கடிந்து கொண்டேன்; நான் நம்முடைய ஜனத்தைக் கடிந்து கொண்டேன்; நம்முடையசகோதரிகள் முடியை வெட்டிக் கொள்வதால் அவர்களை கடிந்து கொண்டேன்; ஒப்பனை பொருட்கள் (Make-up) பயன்படுத்துவதாலும் அவர்களை கடிந்து கொண்டேன். அவர்கள் அதை செய்யும்படிக்கு அனுமதி கொடுப்பதினால் நம்முடைய சகோதரர்களையும் கடிந்து கொண்டேன். மேலும் நம்முடைய ஊழியக்காரர்களையும், அப்படிப்பட்டவர்களையும் கடிந்து கொண்டேன். அது ஏதோ காரியத்தை அவர்களுக்கு விரோதமாக வைத்துக் கொண்டு பேசவேண்டும் என்ற காரணத்தினால் அல்ல. அதற்கு காரணம் அது அவர்கள் மேல் உள்ள பக்தி வைராக்கியத்தினால் தான். அவர்கள் தேவனுடைய சுதந்திர வீதமாய் இருக்கிறார்கள். தங்களை ஒரு சிறு கூட்டமாக, ஒரு குழுவாக பிரித்துக் கொண்டதால் நம்முடைய ஊழியக்கார சகோதரர்களையும் நான் கடிந்துகொண்டேன். இப்பொழுது, நான் இப்படியாக நினைக்கிறேன், ''நாங்கள் இதை (this), காற்புள்ளியை(comma), இன்னும் அதினோடு தேவன் கூட்டுகிற யாவற்றையும் விசுவாசிப்போம்“ என்று கூறுகிற ஒரு ஸ்தாபனம் இருக்கும்பட்சத்தில்...ஆனால் நாம் நமக்கென்று ஸ்தாபன இராஜ்ஜியங்களை ஏற்படுத்திக் கொண்டு, ”இந்த காலகட்டத்தை விசுவாசிக்கிறோம்“, என்று கூறும்போது,பரிசுத்த ஆவியானவரும் சரியாக உள்ளேவந்த அதே வேகத்தில் அதை விட்டு உடனே வெளியே கடந்து போய்விடுவார். அது சரிதான். பாருங்கள்.எனவே, நாம் அதை காற்புள்ளியோடு நிறுத்திக்கொள்ளும் பட்சத்தில் நம்மால் தொடர்ந்து வளர முடியும். 14சமீபத்தில் மின்னசோட்டாவில் (Minnesota) உள்ள மினியாபோலிஸில் லூத்தரன் சகோதரர்களோடு எனக்கு ஒருகூட்டம் உண்டாயிருந்தது. நீங்கள் எல்லோரும் அதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று நான்யூகிக்கிறேன். அவர் என்னை இருபத்திரெண்டு பக்கம் கொண்ட ஒரு கடிதத்தில் என்னை அவ்வளவாக குறை கூறி எழுதியிருந்தார். அவர், ''நீர் அந்த எண்ணத்தை கூறியிருக்கக் கூடாது“,என்றார். மேலும் அவர், ''நேற்று இரவு பார்வையை மறைக்கும் பனிப்புயலில் பதினைந்து மைல்கள் வாகனத்தை ஓட்டி, கிறிஸ்துவின் ஊழியக்காரன் பேசுவதை கேட்கவேண்டும் என்று வந்தேன். ஆனால் நான் கேட்டது என்னவென்றால் ஒரு மெருகேற்றப்பட்ட குறிசொல்கிறவன் பேசுவதை தான் கேட்டேன்”, என்றார். தொடர்ந்து அவர், ''பதினைந்து வருடங்களாக ஊழியக்களத்தில் இருக்கிற ஒரு மனிதன்,மற்றும் இருபத்தைந்து வருடங்களாக சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறேன் என்று கூறுகிற நீங்கள் அப்படிப்பட்ட உம்முடைய எண்ணத்தை கூறியிருக்கக்கூடாது. மேலும் நீங்கள் பயன்படுத்துகிற இலக்கணத்தை கொண்டு நீங்கள் பேசுகிறதையும், நீங்கள் போதிக்கிற உம்முடைய உபதேசத்தையும் கேட்டோம். அதுமட்டுமல்லாமல் கடந்த இரவு சாத்தானால் சுகப்படுத்தமுடியாது என்று வேறுகூறினீர். தொடர்ந்து அவர், ''அப்படிப்பட்ட குறிப்பை கூறினதால் உங்களுக்கு வெட்கமாக இல்லையா“,என்றார். நான், ''அவர் ஒரு லூத்தரன் கல்லூரியின் முதல்வராயிருக்கிறார்“, என்று எண்ணிக் கொண்டேன். 15அவர்,''சரியாக இங்கே எங்கள் கல்லூரிக்கு அருகில் அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள். அவள் நீளமான ஒரு உடையை அணிந்துகொண்டு, தன்னிடத்தில் வரும் மக்கள் மீது தன்னுடைய கரங்களை வைப்பாள். பின்னர் அவர்களுடைய இரத்த நாளங்களை வெடுக்கென்று இழுத்து, தன்னுடைய கழுத்துக்கு பின்னாக இருந்து ஒரு சிறிய மயிரை எடுத்து, அதைசுருட்டி, அதன்மேல் இரத்தத்தை பூசி,தனக்கு பின்புறம் உள்ள ஒரு சிறிய ஓடைக்கு சென்று, இவ்விதமாக தன் தலைக்கு மேலாக அதை அந்தஓடையில் தூக்கி எரிந்துவிடுவாள்“, என்றார் தொடர்ந்து அவர், ''மக்கள் அங்கே நின்று கொண்டிருக்கும் போது,அவள் திரும்பி பார்க்கவேண்டும் என்ற வலுக்கட்டாயத்தினால் திரும்பி பார்க்கும் பட்சத்தில், வியாதி அந்த நபரின் இரத்தத்திலேயே...அவளுடைய மயிரிலேயே இருக்கும். பின்னர், அவர்கள் திரும்பி பார்க்கும் போது, வியாதிஅந்த நபரின் மேல் திரும்பி வந்துவிடும். ஆனால் அவர்கள் அப்படி செய்யாத பட்சத்தில், அந்த நபர் சுகத்தை பெற்றுக் கொள்வார்“. ''அவர்களில் இருபது சதவீதம் பேர் சுகத்தை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் நீங்களோ பிசாசினால் சுகப்படுத்த முடியாது என்று கூறுகிறீர்கள்”,என்றார். 16ஓ, அவரிடம் அறிவைக் கொண்டு அணுகும் ஒருநல்ல அணுகுமுறை இருக்கிறது. ஆனால் சகோதரனே, அவ்விதமாய்நாம் அணுகுவதில்லை அறிவைக் கொண்டு அல்ல; நாம் வேதவார்த்தையை கொண்டு அணுகுகிறோம். ''சரி, அந்த இருபத்து இரண்டு பக்க கடிதத்தில்என்னை சகோதரன் என்று கூட குறிப்பிடாமல் வெறுமனே பிரான்ஹாம் என்று எழுதியிருக்கிறாரே“ என்று நினைத்து கொண்டேன். அவர், ''நீர் உம்முடைய ஊழியத்தின் வருடங்களை குறித்து பேசுகிறாய். நானோ நீர் பிறப்பதற்கு முன்னால் இருந்து சுவிசேஷத்தை பிரசங்கித்து வருகிறேன்“.என்றார். நான், ''சரி, ஒருவர் எப்படிப்பட்டவராயிருந்தாலும் அவ்வளவு நீண்ட நாட்களாக சுவிசேஷத்தை பிரசங்கிக்கிற ஒரு மனிதர் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும்“, என்று எண்ணினேன். பாருங்கள். நாம் ஒருவருக்கு ஒருவர் மரியாதைகொடுக்க வேண்டும். எனவே என் இருக்கையில் உட்கார்ந்து என்னால் முடிந்த சிறப்பானதை, எனக்கு தெரிந்த சிறிய அளவில், இரண்டு பக்கத்திற்க்கு அவரை அங்கீகரிக்கும் படிக்கு அவரைக் குறித்து எழுதினேன். நான் அன்பான சகோதரனே, நிச்சயமாக நீர் ஊழியத்தில் செலவிட்ட அநேக வருடங்களையும் இன்னும் இவை யாவற்றையும் நான் பாராட்டுகிறேன். கிறிஸ்துவின் ஊழியக் காரனாகிய நான் அதை பாராட்டுகிறேன். நிச்சயமாக உங்களுடைய குறை கூறுதலையும் (criticism) நான் பாராட்டுகிறேன். ஆகவே குறை கூறுதலைஒரு மனிதன் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அவனுடைய அனுபவத்தில் ஏதோ தவறு இருக்கிறது. பாருங்கள். ஏனெனில் நம்மை திருத்தும்படிக்கும், நம்முடைய தவறான காரியங்களை நாம் பார்க்கும்படிக்கும் தேவன் நமக்கு குறைகூறுதலை அனுப்புகிறார். குறை கூறுதலினால் நான் அநேக முறை உதவி செய்யப்பட்டிருக்கிறேன்,அது நட்புமுறையிலான குறை கூறுதலேயன்றி, ஏதோ தரம் குறைவாகவும்,கோபமாக பேசுவது அல்ல, ஆனால் அது வெறுமனெ நட்பு முறையிலான குறை கூறுதலாயிருக்கிறது.(Friendly criticisim) எனவே நான், ''அதை பாராட்டுகிறேன் ஐயா”, என்றேன். 17மறுபடியும் நான், ''நீங்கள் என்னுடைய இலக்கணத்தைப் பற்றி பேசும்போது ஒரு காரியத்தை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்,உண்மையிலேயே, எனக்கு கல்விப்படிப்பு இல்லை. அது உண்மைதான்“ என்றேன். ''ஆனால், என்னைஆச்சரியப்பட வைத்த காரியம் என்னவெனில், ஒரு லூத்தரன் கல்லூரியின் தலைவரான அவர் சூனியக்காரியினால் சுகப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டிருந்தது; அது அவர் தன்னுடைய வேதாகம அறிவை தேவனுடைய வார்த்தையின் மேல் சார்ந்திருக்க செய்வதற்கு பதிலாக தன்னுடைய அனுபவத்தின் மேல் சார்ந்திருக்க செய்ததுதான்” என்றேன். நான், ''சாத்தானைச் சாத்தான் துரத்தினால், அவனுடைய இராஜ்யம் பிரிந்திருக்குமே.அவனால் சுகப்படுத்த முடியாது. அவனால் சுகப்படுத்த முடியாது என்று இயேசு கூறியிருக்கிறாரே. ஆனால் நீங்களோ அவனால் சுகப்படுத்த முடியும் என்கிறீர்கள். நான் இயேசு கூறினதை விசுவாசிக்கப்போகிறேன்.(பாருங்கள், அதுதான் சரி), ஏனெனில் ஒவ்வொரு மனிதனுடைய வார்த்தையும் தவறு என்றும், அவருடையதே சரி என்றும் அவர் கூறியிருக்கிறார். எனவே நான், ''இயேசுவை விசுவாசிக்கிறேன்“ என்றேன். ஒரு லூத்தரன் கல்லூரியின் முதல்வர் தன்னுடைய வேதாகம அறிவை வேதவார்த்தையின் மேல் சார்ந்திருக்க செய்வதற்குபதிலாக ஒரு அனுபவத்தின் மீதோ அல்லது ஒரு உணர்ச்சிவசப்படுதலின் மீதே சார்ந்திருக்க செய்வது என்னை ஆச்சரியப்படுத்துகிறது“ என்றேன். தொடர்ந்து நான், ''ஒரு கல்லூரியின் தலைவரோ அல்லது யாராயிருந்தாலும் மற்றும் எந்த ஒரு ஊழியகாரரோ தன்னுடைய வேதாகம அறிவை தேவனுடைய வார்த்தையின் மேல் மட்டுமே சார்ந்திருக்க செய்ய வேண்டும்”, என்றேன். நான், ''நீங்கள் என்னை குறிசொல்கிறவர் என்று அழைக்கும் காரணம் என்னவெனில், அது நான் இருதயத்தை வகையறுக்கிற காரியத்தினிமித்தம் என்று நம்புகிறேன்“. மேலும்,''உங்களுக்கு தெரியுமா? நம்முடைய கர்த்தர் அதே காரியத்தை செய்வதை பார்த்த பரிசேயர்களும், சதுசேயர்களும் ஒரு விசை அதேவிதமான கருத்தை தெரிவித்து அவரை பிசாசுகளுக்கு தலைவன் (Beelzebub) என்றுஅழைத்தார்கள்”. இப்பொழுது நான் சரியாயிருக்கும் பட்சத்தில் காரியம் என்னவாகும்? எனவேஇயேசு கூறினார் பரிசுத்த ஆவியானவர் வந்து அதே காரியத்தை செய்யும்போது அதற்கு விரோதமாக பேசப்படும் ஒரு வார்த்தையும் இம்மையிலும், மறுமையிலும் மன்னிக்கப்படாது. உங்களுடைய ஐம்பது வருட கால பிரசங்கமும் (ஊழியம்) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசப்படும் ஒரு வார்த்தையும் அது மன்னிக்கப்படாது. ஆனால் நான், 'அதற்காக உங்களை மன்னிக்கிறேன். தேவனும்அதை உங்களுக்கு மன்னிப்பார் ஏனெனில் அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று அவர் காண்கிறார்“,என்றேன். எனவே என்னால் முடிந்த மிகவும் சிறந்த கடிதத்தை அவருக்கு எழுதினேன். அதன் பிறகு நான் அவரை சந்திக்க வரும்படிக்கு எனக்குஅழைப்பு கொடுக்கப்பட்டு அவரிடத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. 18வர்த்தக சகோதரர்கள் காலை உணவு கூட்டத்தில் கலந்து கொண்டு, முழு சுவிசேஷ வர்த்தக சகோதரர்களுக்காக அக்கூட்டத்தில் பேசினேன்.திரு. மூர், சகோதரன். ஜாக் மூர் ஒரு அருமையான மனிதன்,அநேக சகோதரர்கள் அவரை நன்கு அறிந்திருக்கிறார்கள்.மற்றும் இந்த டாக்டர். ஹிக்ரே (Dr. Hegre) சகோதரன் மூரிடத்தில் வந்து, நீங்கள் அவரை கல்லூரிக்கு அழைத்து வரமுடியுமா என்று கேட்டார். நான் ''நிச்சயமாக இப்பொழுது அங்கே என்னால் போகமுடியும்“, என்று நினைத்தேன். சகோதரன் மூர், அவர்ஒரு வேதாகம வல்லுநர் (theologian). நல்லது, அவரை என்னுடன் அழைத்து செல்வது நலமாயிருக்கும்.எனவே, நானும் அவரிடத்தில், ''சரியாக எனக்கு பக்கத்தில் நீங்கள் உட்காருங்கள். எனக்கு புரியாத வார்த்தைகளிலும், இலக்கணத்திலும் அவர் பேசுவாரானால், இவ்விதமாக உங்கள் காலை நான் உதைப்பேன். அதன் பின் அங்கிருந்து நீங்கள் தொடர வேண்டும்”, என்றேன். ''அவரும் முழுமையாக, சரி“,என்றார். 19எனவே நாங்கள் கல்லூரிக்கு சென்றோம். ஏறக்குறைய இங்கிருக்கிற இந்த அரங்கத்தின் அளவுக்கு ஒத்தஒரு இடத்தை விருந்திற்காக ஆயத்தம் பண்ணியிருந்தார்கள். அது நார்வே தேச மக்கள்,அவர்களுடைய விருந்து அமைப்பு மிகவும் நேர்த்தியாயும், அருமையாயும் இருந்தது. அடுத்து ஒருபக்கத்தில் அந்த கல்லூரியின் தலைவரும், அருகில் அவருடைய உதவியாளனும் அமர்ந்திருந்தனர். எனவே, நான் முடித்தவுடன், அவர்,''சகோதரர் பிரான்ஹாம், உங்களிடத்தில் சில கேள்விகள் கேட்கபோகிறேன்“, என்றார்;. நான், ''முதலில் உங்களிடத்தில் ஒரு வார்த்தை பேசட்டும்“, என்றேன்.''உங்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதில்கூற முடியாமல் போகலாம். அப்படி என்னால் முடியாத பட்சத்தில், சகோதரன். மூர் இங்கே எனக்கு உதவி செய்வதில் உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையே”, என்றேன். உங்களுடைய கேள்விகளுக்கு என்னால் சரியாக பதில் கூறாமல் போகலாம், ஆனால் என்னால் முடிந்ததை நான் செய்வேன். மேலும் அவர், ''இதோ காரியம் இவ்விதமாயிருக்கிறது. நாங்கள் பெந்தெகோஸ்தேக்களைப்பற்றி அநேக வருடங்களாக கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்களிடத்தில் சென்றும், அவர்களை கண்டுமிருக்கிறோம். ஆனால் அவர்கள் நாற்காலிகளை எட்டி உதைத்து கொண்டும், ஜன்னல்களை தட்டிக்கொண்டும், இன்னும் அது போன்ற காரியங்களை செய்து கொண்டும், எங்கள் வாழ்நாளில் நாங்கள் கேட்டிராத பெரிய இரைச்சல் போடுவதையும், இன்னும் அப்படிபட்டவைகளை தான் நாங்கள் அவர்களிடத்தில் கண்டுபிடித்தோம்“,என்றார். தொடர்ந்து, 'அந்த மக்கள் என்னதான் பெற்றிருக்கிறார்களோ?”, என்றார். நான், ''அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறார்கள்“, என்றேன். அவர், ''பரிசுத்த ஆவியா“ என்றார். நான், 'ஆம்“ என்றேன். அவர், ''நீர் எப்பொழுதாவது ஒரு பெந்தெகோஸ்தனாக இருந்தீர்களா?“,என்றார். நான், 'நல்லது, ஒருவிசை நான் சிறுபையனாக இருந்தபோது மிஷனரி பாப்டிஸ்ட் சபையை சேர்ந்திருந்தேன். மற்றும்அங்கே தான் ஊழியனாக நியமிக்கப்பட்டேன். ஆனால் நான் நியமனம் பண்ணப்பட்ட உடனே,நான் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டேன்,எனவே நான் அது முதல் பெந்தெகோஸ்தேகாரனா யிருக்கிறேன் என்று எண்ணுகிறேன்“, என்றேன். அவர், ''அந்த பெந்தெகோஸ்து மக்களாகிய அவர்கள் அப்படி நாற்காலிகளை எட்டி உதைப்பது, இன்னும் அது போன்ற காரியங்களை செய்வது அதை தான் பரிசுத்த ஆவி என்றும், பெந்தெகோஸ்து என்றும் என்னிடத்தில் நீங்கள் கூறுகிறீர்களா?“ என்றார். நான், ''ஆமாம், அதுபரிசுத்த ஆவிதான்“, என்றேன்.தொடர்ந்து, 'காரியம் என்னவெனில், அவர்களிடத்தில் அவ்வளவு அழுத்தம்,நீராவி உண்டாயிருந்தபடியால் அவர்கள் அதை (அழுத்தத்தை) தொடர்வண்டி இயந்திரத்தில் செலுத்தி சக்கரத்தை நகர செய்வதற்கு பதிலாகஊதலை (whistle) ஊதுகிறார்கள்”, என்றேன். பாருங்கள். அவ்வளவுதான். அது சரிதான். எனவே, ''அங்கே அவ்வளவு நீராவி இருக்கிறபடியால்,அவர்கள் ஊதலை ஊத வேண்டியதாயிருக்கிறது. எனக்கு தெரிந்த தெல்லாம் அவ்வளவு தான். அதற்குமேல் அவர்களால் அதை அடக்கி வைக்கவும் முடியாது“, என்றேன். அவர், ''நல்லது. . . “ நான், 'என்னால் பெந்தெகோஸ்தே விசுவாசத்தில் அடிப்படை போதனையோ அல்லது அடிப்படை போதனை மூலம் பெந்தெகோஸ்தே விசுவாசத்தை பெற்றுக் கொள்ள முடியுமானால். . . அந்தமக்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள், ஆனால் அவர்கள் தாங்கள் வகிக்கும் நிலையை உணராமலிருக்கிறார்கள். அவ்வளவு தான்“,என்றேன். அவர், ''சரி, அப்படியானால் லூத்தரன்களாகிய நாங்கள் எதைப் பெற்றிருக்கிறோம்“, என்றார். நான், ''பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறீர்கள்“என்றேன். அதன்பின் அவர் பேசுவதை நிறுத்திவிட்டு, ''இப்பொழுது, எனக்கு உங்களை என்ன கேட்பது என்று தெரியவில்லை“, என்றார். 20நான், ''நல்லது இங்கே உங்களுக்கு சோளம் பயிரிடப்பட்ட ஏறக்குறைய ஆயிரம் ஏக்கர்கள் உண்டென்று அறிந்திருக்கிறேன்“,என்றேன். மேலும் ''மாணவர்கள் தங்கள் சொந்த செலவை செய்ய அவர்களிடத்தில் பணம்இல்லாத பட்சத்தில், அவர்கள் கல்லூரி மூலமாக அதை செய்து கொள்ளலாமே”என்றேன். அவரும், ''அது சரிதான்“, என்றார். எனவே தேவன் எனக்கு ஒரு எண்ணத்தை கொடுத்தார்,நான் அவரிடத்தில், ''ஐயா, ஒரு தடவை ஒரு மனிதன் சோளம் பயிரிடுவதற்காக தன்னுடைய பெரிய வயலை ஏர் உழுது, தன்னுடைய வயலில் சோளத்தை பயிரிட்டான். ஒரு காலைபொழுதில் அவன் வெளியே சென்று, தன்னுடைய வயலை ஏறெடுத்து பார்த்த போது, சிறிய இரண்டிலையுள்ள இளம்பயிரை (blades) பார்த்தான்“. அதை நாங்கள் தெற்கில் ''இளந்தளிர் சோளம்” (springcorn) என்றழைப்பதுண்டு, அது சிறிய இரண்டிலையுள்ள இளம்பயிர் அவ்விதமாக அது மேல் எழும்பி வரும். ''அந்த மனிதன் தன்னுடைய வாசற்படியில் வந்து நின்று, என்னுடைய சோளப் பயிறுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்“ என்றான். ''அப்படியானால், அவன் சோளப் பயிரைப் பெற்றுக் கொண்டானா?” என்று நான் கேட்டேன். அவர், ''நல்லது, அவன் அதினுடைய ஆரம்பத்தைத்தான் பெற்றுக் கொண்டான்“, என்றார். நான், ''நல்லது, மறைமுகமாக(Potentially) அவன் அதைப் பெற்றுக் கொண்டான். பாருங்கள். அதை அவன் அதினுடைய குழந்தைப் பருவ நிலையில் பெற்றுக் கொண்டான். அது லூத்தரன்களாகிய நீங்கள் தான்“, என்றேன். 21கடைசியாக அந்த சோளப்பயிர் மகரந்தக் குஞ்சம் (tassel) என்னும் நிலைக்கு வளர்ந்து வந்தது. உங்களுக்குத் தெரியுமா அந்த மகரந்தக் குஞ்சம் என்ன செய்ததென்று? அந்த மகரந்தக் குஞ்சம் கீழேயுள்ள இரண்டிலையுள்ள இளம்பயிரை பார்த்து, ''இனி மேல் உன்னால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. நான் ஒரு மகரந்தக் குஞ்சம்“, என்றது. ஆனால் அது தன்னை திரும்பவும் மறுஉற்பத்தி செய்து கொள்வதற்கு அந்த இளம்பயிரை அது பயன்படுத்த வேண்டியதாயிருக்கிறது. பிறகு அது திரும்பவும் இரண்டிலையுள்ள இளம்பயிரை எழுப்பி அதிலிருந்து வந்த மகரந்தக் குஞ்சத்திலிருந்து ஒரு கூலக்கதிரை (ear) கொண்டு வந்தது. எனவே, முதலாவது லூத்தரன்களாகிய நீங்கள் வந்தீர்கள்; இரண்டாவது தேவனுடைய மெத்தோடிஸ்டின் அசைவு; மூன்றாவது சபைக்கு, வரங்கள் திரும்ப அளிக்கப்படுதலையும், நிலத்தில் விழுந்த (விதைக்கப்பட்ட)அசலான கோதுமை மணியையும் கொண்டு வந்த பெந்தெகொஸ்தே குழுவாயிருக்கிறது. யோவேல் புஸ்தகத்தில் கூறப்பட்டதுபோல அது 'திரும்பவும் அளிக்கப்படுகிறதாயிருக்கிறது….பாருங்கள். இப்பொழுது அந்த கூலக்கதிரில் அதிகப்படியான பூஞ்சைகள் (fungus) இருக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் இருப்பினும் அதில் சில தானியங்களையும் நாம் பெற்றிருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியும். அவர், ''நல்லது“, என்றார். நான், ''அதுதான் அசலான தானியம்“ (கோதுமைமணி). எனவே, லூத்தரன்சபையின் உயர்நிலைத்தான் (advanced) பெந்தெகொஸ்து சபையாகும். தெளிவாக சொல்லப்போனால், இலை இல்லாமல் போகுமானால், அங்கு மகரந்தக் குஞ்சமும் இல்லாமற்போகும்; இலையில் இருந்த ஜீவன் தான் அங்கு மகரந்தக்குஞ்சத்தை உருவாக்குகிறது. அதே போல் மகரந்தக் குஞ்சத்தில் இருக்கும் ஜீவன் தான் தானியத்தை உருவாக்குகிறது. எனவே அதுதாமே உயர்நிலைபெற்ற ஜீவனுள்ள தேவனுடைய சபையாயிருக்கிறது”, என்றேன். 22அவர் நிறுத்தி, தன்னுடைய தட்டைப் பின்னாகத் தள்ளி, ''சகோதரன் பிரான்ஹாம், ஒரு முறை நான் மேற்கிற்கு சென்றிருந்தேன். எல்லா ஆவிக்குரிய வரங்களைப் பற்றியும் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைக் குறித்து கேள்விப்பட்டேன். அந்த புத்தகத்தை எழுதின மனிதனை கண்டுபிடிக்க வேண்டுமென்று மேற்கிற்கு சென்றிருந்தேன். அந்த மனிதனை நான் கண்டுபிடித்தவுடன், அவனும், 'ஓ, அவைகளை நான் வெறுமனே எழுதவேண்டும் என்று எழுதினேன்; நானோ அவைகளை பெற்றிருக்கவில்லை, நான் வெறுமனே அவைகளைப் பற்றி எழுத வேண்டுமென்றுதான் எழுதினேன். தொடர்ந்து அவன், ''நல்லது, அதை நான் பெற்றிருந்திருக்கவேண்டும்…, என்றான். மேலும் அவர், ''நான் சுற்றிலும் எல்லாவிடத்திலும் சென்று, இவை எல்லாவற்றையும் கவனித்துப் பார்த்தேன்; பெந்தெகொஸ்தே குழுக்களிடத்திலும், இன்னும் அதுபோன்ற இடங்களுக்கும் சென்று பார்த்தபோது, அவர்கள் வெறுமனே உரக்க சத்தமிடுவதைதான் கவனித்தேன்“, என்றார். பாருங்கள், அது இவ்விதமாக நிகழ்ந்தது. மக்கள் உண்மையிலேயே களிகூர்ந்து கொண்டிருந்தபோது, உங்களுக்குத் தெரியும், பிசாசும் அவரை தவறான நேரத்தில் அங்கே கொண்டு போனான். அங்கே தான் அவரும் அவர்களைப் பற்றிய அப்படிப்பட்ட எண்ணத்தை பெற்றுக்கொண்டு,வெளியே சென்றார். பாருங்கள். அவர், ''உங்களுக்கு நான் எழுதின கடிதத்துக்காக உங்களிடத்தில் மன்னிப்பைக் கேட்கிறேன். அதற்கு விரோதமான ஒரு நிலைக்கு என்னைநானே உருவாக்கிக் கொண்டு, அங்கேதான், சரியாக அங்கே தான், அதை நான் வலுக்கட்டாயமாக்கிக் கொண்டு; நீங்கள் ஒரு குறிசொல்பவர் தவிர வேறொன்றுமில்லை“,என்று கூறினேன். எனவே,என்னை மன்னிக்குமாறு உங்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன். நானும், ''ஏன், நிச்சயமாக, ஐயா, நான் உங்களுக்கு கடிதத்தில் கூறின எந்தவொன்றையும் உங்களுக்கு விரோதமாக மனதில் வைக்கமாட்டேன்“ என்றேன். 23அவர்,''அதை உங்கள் வாயிலிருந்து வரவேண்டும் என்று நான் கேட்கவிரும்பினேன்“. இப்பொழுது, சகோதரர் பிரான்ஹாம், நானும், என்னுடைய மாணவர்களும் பரிசுத்த ஆவிக்காக பசியாயிருக்கிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும்?”, என்றார். எனவே, உங்களுக்குத் தெரியும், அவரிடத்தில் நான் கூறினது என்னவென்று, உங்களுக்கு தெரியாதா? நான், ''உங்களுடைய முதுகை திருப்பி, இவ்விதமாக உங்கள் முதுகை திருப்பி, உங்களுடைய முகத்தை சுவருக்கு நேராக முழுமையாக திருப்பி, தேவன் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை கொடுக்கும் வரைக்கும் முழங்காற்படியிலிருந்து எழுந்திருப்பதில்லையென்று தீர்மானம் செய்துகொள்ளுங்கள்“ என்றேன்.இப்பொழுது இதை, அதை அல்லது வேறு எதையோ நினைக்கவேண்டாம்.தொடர்ந்து அங்கேயே தரித்திருந்து, தேவனே, 'எனக்கு பரிசுத்த ஆவி வேண்டும்…' என்று கூறுங்கள். நான் அவர்களிடத்தில் சென்று, அவர்கள் மீது கரங்களை வைத்தேன், உடனடியாக நாற்பது பேர் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்கள். இப்பொழுது, அவர்கள் ஏறக்குறைய ஐநூறு பேர்களாக, பெலப்பட்டவர்களாய், அடையாளங்களையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்து, தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். 24சகோதரர்களே, நாம் பெற்றிருக்கிற காரியத்தை இந்த உலகமும் பெறவேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நாம் அதை இவ்விதமாக அணுகவேண்டும்...நீங்கள் ஒரு தச்சராக இருப்பீர்களானால் எப்படியிருக்கும்?இங்கே கடைசியில் அமர்ந்திருக்கும் இம்மனிதனைஅல்லது அங்கே இருக்கும் சகோதரர் பார்டர்ஸை (Bro. Borders) நான் எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்கிறேன்.மற்றும் அவர் ஒரு தச்சன் (carpenter) என்று நான் விசுவாசிக்கிறேன். சரி, அவர் சுத்தியலை வைத்து இவ்விதமாக ஆணியை அடித்துக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், என்னிடத்திலோ ஒரு வகையான தானியங்கிசுத்தியல் (automatic hammer) இருக்கிறது, அதில் ஒரு பெட்டி நிறைய ஆணிகளை வைக்க முடியும். அதை நான் இப்படியாக பிடித்துக்கொண்டு, பிர்ர்ர்ப் என்ற ஓசையுடன் அதை இயக்கி, அவருடைய சுத்தியல் செய்வதைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக என்னுடையதை கொண்டு அந்த பலகைகளை என்னால் பொறுத்தமுடியுமானால்? உடனே, நான் அவரிடத்தில் சென்று, ''ஆ, பையனேஅதை இன்னும் செய்து முடிக்கவில்லையே. அதைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியவில்லை. ஏன் உன் விரல்களையும் கூட நீ நசுக்கிக் கொள்கிறாய். என்னே,அதை செய்ய துவங்குவதற்கு உன்னிடத்தில் சரியான கருவி கூட இல்லையே என்று கூறுவேனென்றால்“, நான் அவனை இடறலடைய செய்கிறவனாயிருப்பேன். மற்றும் அந்த (தானியங்கி) சுத்தியலையும் என்னால் விற்கமுடியாது. அது சரிதான். பாருங்கள், நான் எதை பெற்றிருக்கிறேனோ அதற்கேற்றார் போல் என்னுடைய அணுகுமுறையும் இருக்கவேண்டும். எனக்குத் தெரியும், என்னுடையபொருள் அவருடையதைக் காட்டிலும் சிறப்பானது என்று. ஆனால் நான் நினைவுகூரவேண்டியது என்னவெனில், அவரை நான் சரியான வழியில் அணுகவேண்டும். நான் அவரிடத்தில் சென்று, ''எப்படி இருக்கிறீர்கள், ஐயா? என்னுடைய பெயர் பிரான்ஹாம்“, என்று கூறும்போது, அவரும்,''என்னுடைய பெயர் பார்டர்ஸ்”,என்பார். ''நீங்கள் ஒரு தச்சர் என்று நான் காண்கிறேன்“. ''ஆம், ஆமாம் ஐயா, நான் ஒரு தச்சர் தான்“. ''நீங்கள் ஒரு நேர்த்தியான தச்சர் என்று நான் நிச்சயமாகவே நம்புகிறேன்“. ''ஆமாம்“ ''நீங்கள் சுத்தியலை கையாளும் விதத்தை நான் கவனித்துக் கொண்டிருந்தேன்“. அவர் ''ஓ,ஆமாம். இந்த பழைய பெட்சி (சுத்தியல்) என்னுடன் நீண்ட நாளாக இருக்கிறது“. நானும், ''ஆமாம். அது ஒரு நல்ல சுத்தியல். ஆம், அது நிச்சயமாக ஒரு நல்ல சுத்தியல் தான். உண்மையிலேயே அதை நீங்கள் உபயோகிக்கலாம். ஆமாம்“. தொடர்ந்து அவரிடத்தில் கொஞ்ச நேரம் அவ்விதமாக பேச வேண்டும். நான், ''நீங்கள் இந்த புதிய இன்ன - இன்ன சுத்தியலைபற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா?” என்பேன். அவர் ''இல்லை,அதை நான் ஒருபோதும் கேள்விப்படவில்லை என்று நம்புகிறேன்“. ''சரி, இதோ அது இங்கே இருக்கிறது. இங்கே நீங்கள் ஆணிகளை வைத்து, அந்த பலகைகளை அங்கே பொருத்துங்கள். பின்னர் இது எடுத்துக் கொள்கிற நேரத்தை கவனிப்பீர்களானால் நான் எப்பேற்பட்ட தயாரிப்பை வைத்திருக்கிறேன் என்றும் அறிந்துகொள்வீர்கள்“. அதை அவருக்கு அவ்விதமாக எடுத்துக் காண்பிக்கவேண்டும். ''இதை எடுத்துக் கொண்டு,சிறிது நாட்களுக்கு முயற்சி செய்யுங்கள்.பின்னர் அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று பாருங்கள். நான் மறுபடியும் திரும்பிவருவேன்”, என்று கூறுங்கள். பாருங்கள். அதுதாமேசரியான தயாரிப்பாக இருக்கும்பட்சத்தில், அது தன்னைத்தானே விற்றுக்கொள்ளும். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு தெரியும், இல்லையா, சகோதரர்களே? 25பாருங்கள். நாம் சரியான காரியத்தை பெற்றிருக்கிறோம். அதை மக்களிடத்தில் கொண்டு செல்ல நாம் அவர்களை சரியாக அணுகவேண்டும். அதுதான் காரியம். இது உண்மையிலேயே அசலான காரியமாயிருக்கிறது. இது பரிசுத்த ஆவியாயிருக்கிறது. அதை என் முழு இதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன். சகோதரர்கள் முரட்டாட்டம் பண்ணுகிறவர்கள் (renegades) என்பதை நான் விசுவாசிப்பதில்லை. அவர்கள் சகோதரர்கள் தான் என்பதை நான் விசுவாசிக்கிறேன். பகுத்தறிதலை(discernment) செய்யும் பரிசுத்த ஆவியை ஏதோ ஒரு குறிசொல்லுதல் என்று நான் விசுவாசிப்பதில்லை. அது பரிசுத்த ஆவியானவர் தன்னைத்தானே சபைக்கு வெளிப்படுத்தி, சபையை அதனுடைய நிலைக்கு கொண்டு வருகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். மேலும், நாம்மட்டும் முழு பெந்தெகொஸ்து அசைவையும் எடுத்துக் கொள்ளும் ஒரு வழியை பெற்று, நம்முடைய சிறு சிறு தடைகளையும் முற்றிலும் உடைத்து, கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் வீற்றிருக்கும்படிக்கு, ஒரே ஆவியினால் ஞானஸ்நானம் பெற்று, ஒன்றாயிருக்கக்கூடிய ஓர் நிலைக்கு வருவோமானால், ஓ,இதற்கு முன்பு இருந்திராத பிரத்தியட்சமாகுதல்கள்(manifestations) இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாம் எவ்விடத்திலும் சென்று ஒவ்வொருஇடத்திலும் இருக்கும் மெதொடிஸ்டுகளையும், பாப்டிஸ்டுகளையும், பெந்தெகொஸ்துகளையும் அணுகும்போது அதுநடக்கும் என்று நான் நம்புகிறேன், சகோதரர்களே. 26நான் இங்கேயே நிற்கவேண்டும் என்று விரும்பவில்லை. வேதாகமத்திலிருந்து ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை வாசித்து, ஒருசில நிமிடங்களுக்கு உங்களிடத்தில் பேச விரும்புகிறேன், நீங்கள் போக வேண்டும் என்று எனக்குதெரியும், நானும் கூட போகவேண்டும், சனிக்கிழமை காலை அந்த (அருமையான) காலை உணவை பெற்றுக்கொண்டேன், மேலும் இங்கே இன்னொன்றை எதிர்பார்த்தவனாய் திங்கள் இரவும் இங்கே தங்குவதற்கு இருக்கிறேன்.இருப்பினும், எனக்குத் தெரியாது நான் சகோதரன். பார்டர்ஸிடத்திலும் மற்றவர்களிடத்திலும் பேச வேண்டும். ஆனால் நான் உங்களுக்கு உதவவே இங்கே இருக்கிறேன்என்பதை உங்களிடத்தில் விட்டுசெல்ல விரும்புகிறேன். நான் இங்கே ஒரு சில நிமிடங்களுக்கு ஒன்றுகூட வந்திருக்கிறோமே தவிர வேறு எதற்கும் இல்லை. இன்று மதியம் ஆராதனை துவங்குவதுமுதல் இங்கேயே நாம் தரித்திருந்து, மறுபடியும் காலையில் திரும்பி வரலாம் என்று நான் விரும்புகிறேன். மேலும் சகோதரர்களாகிய நீங்கள் கூறவந்ததை கவனித்தேன், அதை எவ்வளவாய் நான் பாராட்டுகிறேன். எனவே, இப்பொழுது, சரியாக என் இதயத்திலிருக்கிறதை உங்களுக்கு தெரியப்படுத்தட்டும். நான் உங்களை பாராட்டுகிறேன், நீங்கள் என்னுடைய சகோதரர்கள் என்ற முறையில் உங்களுக்கு உதவி செய்ய என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து, தேவன் எனக்கு கொடுத்த இந்த சிறிய ஊழியத்தையும், உங்களுக்கு அவர் கொடுத்ததையும் கொண்டு,இப்பொழுது நாம் அதை ஒன்று சேர்த்து தேவனுடைய இராஜ்யத்திற்கென்று நம்மால் என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம். தேவனுடைய வார்த்தையை அணுகுவதற்கு முன், ஒருசில நிமிடங்களுக்கு நாம் தலைகளை தாழ்த்துவோம். 27மிகவும் கிருபையுள்ள தேவனே, தீர்க்கதரிசி வனையப்படும்படிக்கு குயவனுடைய வீட்டிற்கு சென்றதுபோல, நாங்களும் வனையப்படுதலுக்கு ஆயத்தமாயிருக்கிறதை அறிந்து; தேவனே, தாழ்மையும்,நருங்குண்டதும்,நொறுங்குண்டதுமான ஆவியோடு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உம்மண்டைக்கு நாங்கள் வருகிறோம். மேலும் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் குணாதிசயங் களை பிரதிநிதிப்படுத்தும், வேறுப்பட்ட குணாதிசயங்களை கொண்டவர்களாய் நாங்கள் வனையப் படும்படிக்கு நீர் எங்களை உடைக்கவேண்டும் என்று இக்காலையில் எங்கள் இருதயங்களில் நாங்கள் வாஞ்சிக்கிறோம். கர்த்தாவே, என்னுடைய புத்தியீனமான இருதயத்தை எடுத்துப்போடும். என்னுடைய திக்கு (stammering) வார்த்தைகளை நீர் எடுத்து, அதை சுக்கலாக உடையும், தேவனே. என்னுடைய சொந்த சுய சித்தத்தை, உடைத்துப்போட்டு, என்னை கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக ஆக்கும். இதை தந்தருளும், கர்த்தாவே. எங்களுடைய இருதயத்தின் வாஞ்சையும் அதுவாகத்தான் இருக்கிறது. அதற்காகத் தான் நாங்களும்இங்கே இருக்கிறோம். மேலும், கர்த்தாவே, நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, இங்கேநீர் இருக்கும் இந்த பிரசங்க பீடத்தண்டையில் வீற்றிருக்கும் சகோதரர் மைக்கல்சன்,உம்மை விசுவாசிக்கும் இந்த சிறிய யூதசகோதரன், அவருக்காகவும் நான் ஜெபிக்கிறேன். பிதாவே, நீர் அவரை ஆசீர்வதிக்கும்படிக்கு நான்அவருக்காக ஜெபிக்கிறேன். இந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் இருக்கும்படிக்கு கொடுத்த தருணத்திற்காக உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 28உம்முடைய வார்த்தையை வாசிக்கும்படி ஒரு சில நொடிகளுக்கு நாங்கள் காத்துக் கொண்டிருக்கையில், எங்கள் எல்லோரையும் இப்பொழுது ஆசீர்வதியும்.எங்கள் எண்ணங்களை ஆசீர்வதித்து தாரும். கர்த்தாவே, எங்களுடைய ஆராதனைகளை ஆசீர்வதியும். தேவனே. எங்களுடைய இருதயங்களை நீர் அறிந்திருக்கிறீர். இங்கே இந்த இருபதாம் நூற்றாண்டில், இந்த 1962-ம் வருடத்தில், காலம் கடந்துபோய், இன்னொரு நூற்றாண்டின் துவக்கத்தின் அருகில் இருக்கும் இந்த இருளும், மந்தாரமுமான தேசத்தில் உள்ள என்னுடைய சகோதரர்களோடு ஒரே இருதயத்தோடும்,ஒரே ஆத்துமாவோடும், ஒரே நோக்கத்தோடும் ஒன்றாக இணைக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன். இங்கே இந்த மேற்குக்கரையில், நாகரீகமானது கிழக்கு துவங்கி மேற்கிற்கு வந்திருக்கிறது, அது இதற்குமேலும் தொடர்ந்து போகாது என்று நாங்கள் இப்பொழுது உணர்கிறோம். இந்த (மேற்கு) கரையை விட்டு நாம் கடந்து போவோமானால்,மறுபடியும் நாம் கிழக்கிற்கு வருவோம்.நாகரீகமானது கிழக்கு துவங்கி மேற்கிற்கு வந்தது போல, சூரியனும் கிழக்கு துவங்கி மேற்கிற்கு வருகிறது என்று நாங்கள் உணர்கிறோம். குமாரனானவர் (S-O-N) கிழக்கத்திய மக்கள் மீது வந்து பெரிய வெளிச்சத்தையும், அடையாளங்களையும் காண்பித்து, அவர்தான் மேசியா என்று நிரூபித்த ஒரு நேரம் இருந்தது. 29ஒரு நாள் வரும் அது பகலுமல்ல, இரவுமல்ல என்று தீர்க்கதரிசி கூறியிருக்கிறார். நாம் போதுமான வெளிச்சத்தை விசுவாசித்து தொடர்ந்து சென்று, அவரே தேவனுடைய குமாரன் என்று அறிந்துகொண்டு, நமக்கென்று சபையையும் ஸ்தாபனத்தையும்கட்டிக்கொண்டு; சகோதரர்களையும், சகோதரிகளையும் ஒன்றாக வைக்க முயன்று,அவர்களை சரியாக ஜீவிக்கச் செய்யக்கூடிய...இருண்ட, பனிமூட்டமான நாளைக் கொண்ட கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் நமக்கு உண்டாயிருந்தது. ஆனால், ஆண்டவரே பனிமூட்டமானது இப்பொழுது விலகிக் கொண்டிருக்கிறது,அது அதே குமாரன் (S-O-N), அதே அடையாளங்களோடும், அதே விசுவாசத்தோடும், திரும்ப அளிக்கப்படுகிறதாயிருக்கிறது. பிள்ளைகளின் விசுவாசத்தை பிதாக்களுடைய விசுவாசத்திற்கு திரும்பக்கொண்டு செல்லக்கூடிய செய்தியானது கடைசி நாட்களில் வரும் என்று நீர் வாக்குரைத்திருக்கிறீர். ஓ, தேவனே, அந்த அசலான பெந்தகொஸ்தே நாளுக்கு நாங்கள் திரும்பிச் செல்லட்டும். ஒருவிசை பரிசுத்தவான்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த மகத்தான விசுவாசத்திற்கு நாங்கள் திரும்பிவரட்டும். 30ஒருவிசை பட்டுப்புழு தின்றுபோட்ட, அந்த தேவனுடைய மகத்தான மணவாட்டி மரமானது, தேவனுடைய குமாரனின் வருகைக்காக சாயங்கால வெளிச்சத்தினால் முதிர்ச்சி யடையந்து கனியை அதின் உச்சியில் கொண்டு வருவதாக. இதை அளியும், கர்த்தாவே.இந்த நோக்கத்திற்காகவே ஒன்றுகூடி வரும் எங்களுக்கு உதவி செய்யும். எங்களை உம்மண்டையில் ஒப்புக் கொடுக்கிறோம். நாங்கள் உம்முடையவர்கள். உமக்கு ஏற்றதை எங்களுக்குச் செய்திடும், கர்த்தாவேஇக்காலையில் இந்த தேவாலயத்தில் இருக்கும் எங்களை உம்முடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கிறோம்,கர்த்தாவே. சிம்சோன் செய்தது போல் நாங்கள்செய்யாமல், எங்களை முழுமையாக உம்மிடத்தில் கொடுக்கும்போது, உம்முடைய நோக்கமானது எங்களுடைய ஜீவியங்களில் நிறைவேற்றப்படுவதாக. சிம்சோன் தன்னுடைய பெலத்தையோ உம்மிடத்தில் கொடுத்தான்,ஆனால் அவன் தன்னுடைய இருதயத்தை உம்மிடத்தில் கொடுக்கவில்லை. தேவனே, எங்களுடைய இருதயமும், எங்களுடைய பெலனும், எங்களுடைய எல்லாமும், எங்களுடையது யாவும் உம்மிடத்தில் கொடுக்கப்படட்டும். அதை பராக்கிரமுள்ளதாக்கும், கர்த்தாவே, தேவனுடைய ராஜ்யத்திற்கென்று அதை பெருகப்பண்ணும். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 31சங்கீதம் 16-ம் அதிகாரத்தில்,படிக்கும்படிக்கு நாம் தெரிந்துகொண்டது, கடைசி வசனமாயிருக்கிறது. ஜீவ மார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு. இப்பொழுது, உங்களுக்குத் தெரியும், நான் உங்களிடத்தில் பிரசங்கிக்க முயற்சிக்கவில்லை. உங்களிடத்தில் ஒருநிமிடம் பேச விரும்புகிறேன், அல்லதுநான் கூறுவது என்னவெனில் பதினைந்து அல்லது இருபது நிமிடங்களுக்கு உங்களிடத்தில் பேசவிரும்புகிறேன். தாவீது இங்கே ஜீவனைக் குறித்து பேசுகிறார். ''ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்“. அதை நீங்கள் கவனித்தீர்களா?''எனக்கு நீர் காண்பிப்பீரா? அல்லது எனக்கு நீர் தெரியப்பண்ணுவீரா? ”நீர் எனக்கு தெரியப்பண்ணுவீர் என்று நான் நம்புகிறேன்; என்றல்ல ''எனக்கு நீர் தெரியப்பண்ணுவீர்“. தேவன் அழைக்கிற ஒவ்வொருவரும் அதற்கு செவிகொடுத்து அவரிடத்தில் வருவார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். எனவே, நம்முடைய கூட்டங்களிலும் அதைத்தான் இப்பொழுது நாம் எதிர்நோக்குகிறோம் என்று நான் நம்புகிறேன். நம்மால் விதையை மட்டுமே விதைக்க முடியும். சில விதைகள் வழியருகே விழும், சில விதைகள் வேறுவழியில் விழும்,சில விதைகள் இன்னொரு வழியில் விழும். ஆனால் ஒரு சில விதைகளோ நல்ல நிலத்தில் விழும். அதுசரி தான். ''ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்“. 32இப்பொழுது, ஜீவனை பெற்றுக்கொள்வதுதான் நாம் சாதிக்கக்கூடியமிகப்பெரிய காரியமாயிருக்கிறது. ஜீவனைக் காட்டிலும் பெரிதானது வேறொன்றுமில்லை. இந்தகாலையில் நான் மகிமைக்கு செல்வேனென்றால், நாமெல்லாரும்அங்கே போவோம், அங்கே நான் ஆபிரகாமை சந்திப்பேன். ''ஆபிரகாமே, இருப்பதிலேயே மிகப்பெரிய காரியம் என்னவென்று அவரிடத்தில் கேட்பேன்“. அவர், ''ஜீவன்“, என்பார். எனவே எப்பேற்பட்ட காரியமானாலும், ஒருவர்சாதிக்க கூடிய மிகப்பெரிய காரியம் அது ஜீவனாயிருக்கிறது. ஜீவனுக்காக நீ என்னத்தை கொடுக்கமுடியும்? என்னுடைய வீட்டில் நான் ஒரு புத்தகத்தை வைத்திருக்கிறேன். அதுசிறைசாலைகளில் ஊழியம் பண்ணுகிற ஊழியர் (சமயகுரு) சகோதரன்.நியுஜென்ட் (Nugent) அவர்கள் எழுதினது என்று நான் விசுவாசிக்கிறேன். கிறிஸ்துவின் காலம் முதல் தொடங்கி பூமியில் மரித்த பெரியமனிதர்களை குறித்ததான சாட்சிகளை இப்புத்தகத்தில் அவர் கொடுத்திருக்கிறார். இந்த புத்தகம் இன்னொரு பக்கத்தில் மிகவும் துன்மார்க்கமானவர்களையும், ஆவிக்குரிய வாழ்வில் சிறப்பானவர்களையும் குறித்த சாட்சியை கொடுத்திருக்கிறார். அதில் நான் வாசித்து கொண்டிருந்த போது, இங்கிலாந்தின் கொலை வெறி பிடித்த மேரி (Blood Mary) என்று நான் விசுவாசிக்கிறேன், அவள் ''எனக்கு இன்னும் ஐந்து நிமிடங்களுக்கு வாழ்வு (ஜீவன்) கிடைக்குமானால் அதற்காக இந்த இராஜ்ஜியத்தையே கொடுத்து விடுகிறேன்“, என்றாள். அந்த இராஜ்யத்திற்காக அநேகரை அவள் கொன்றாள், இருப்பினும், இன்னும் ஐந்து நிமிட ஜீவனுக்காக அந்தஇராஜ்ஜியத்தையே அவள் கொடுக்க விரும்பினாள். 33சரியாக இங்கே பால் ராடரின் (Paul Rader) சாட்சியை இன்னும் நான் ஞாபகம் வைத்திருக்கிறேன்,அங்கே கூடாரத்தில் அவர் மரித்தபோது அல்லது கூடாரம் இருந்த அவர்களுடைய இடத்தில், அவர் மரித்துக் கொண்டிருந்தபோது தன்னுடைய சகோதரன் லூக்காவை அவர் அழைத்தார். என்னுடைய மகன் பில்லி பாலும், நானும் நெருக்கமாயிருந்தது போல அவர்கள் அவ்வளவு நெருக்கமான நண்பர்களாய் இருந்தார்கள். மூடி பள்ளிக்கூடத்தில் (Moody school) மூலம் நான் புரிந்துகொண்டது, அங்கே அவர்களிடத்தில் நான்கு இசைக்கருவிகளுக்கு ஏற்றவாறு அல்லது நான்கு பாடகர் கொண்ட பாடற்குழுவினர் (Quartet) பாடிக் கொண்டிருந்தார்கள். பால்(ராடர்) நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவர்கள் 'என் தேவனே உம்மண்டையில் கிட்டிச் சேர்வேன்“,என்று பாடிக் கொண்டிருந்தார்கள். அவர்''அவர்களை நோக்கி மரித்துக் கொண்டிருப்பது நானா அல்லது நீங்களா?”, என்றார். தொடர்ந்து அவர், ''அந்த திரைகளை உயர்த்தி சில உற்சாகமான சுவிசேஷ பாடல்களை பாடுங்கள்“,என்றார். அவர்கள் அந்த பாடற்குழுவினர், 'அங்கே சிலுவையண்டையில்' (Down at the cross) என்ற அப்படிப்பட்டபாடல்களை பாடத்துவங்கினார்கள். அவர், ''லூக்கா எங்கே?“ என்றார்.அப்பொழுது அவர் அடுத்த அறையில் இருந்தார். அவர்கள் அவரை உள்ளே அழைத்து வந்தனர். அவர், ''லூக்கா இப்பொழுதிலிருந்து இன்னும் ஐந்து நிமிடத்திற்குள் இயேசுகிறிஸ்துவின் சந்நிதானத்தில் அவருடைய நீதியை தரித்தவனாய் நான் நின்று கொண்டிருப்பேன்”, என்றார். நானும் கூட அவ்விதமாய் கடந்து போகட்டும். 34டுவைட்மூடி (Dwight Moody), உங்களுக்குத் தெரியுமா அவருடைய சாட்சி என்னவென்று,(மரித்துக் கொண்டிருந்த போது) அவர் எழுந்து,''இது மரணம். இது என் முடிசூட்டும் நாள்“,என்றார். அவ்விதமாகத் தான் நான் போக விரும்புகிறேன். சற்றே சமீபத்தில் என்னுடைய விலையேறப்பெற்ற தாயார் கடந்து போகும்போது அவருடைய கரத்தைப் பற்றிப் பிடித்திருந்தேன். என்னுடைய மனைவியும் கடந்து போகும் போதும் அவளுடைய கரத்தைப் பற்றிப் பிடித்திருக்கிறேன். அவர்கள் சாலையின் முடிவில் வந்தபோது அவர்களை நான் கவனித்திருக்கிறேன். இருப்பதிலேயே மிகவும் பெரிதான காரியம் அது ஜீவனாயிருக்கிறது. நம்பிக்கையில்லாதவர்களுக்கு இதுமுடிவு பெற்ற பின்னர்; அதுஒரு பயங்கரமான காரியமாயிருக்கும். நாமோ ஜீவ மார்க்கத்தில் நடந்து போய்க்கொண்டிருக்கிறோம். ''ஜீவன் என்றால் என்ன? அதை எங்கே கண்டுபிடிக்கமுடியும்?“ என்று அநேக மக்கள் இப்படியாக சொல்கிறார்கள். ஆனால், அது நம்மை சுற்றி எல்லாவிடங்களிலும் இருக்கிறதே. அவ்விதமாகவே தேவன் அதைச் செய்திருக்கிறார். 35இன்னும் யோபுவின் புத்தகத்தில், அவன் அதைக் குறித்து கேட்டான் என்று நாம் அறிந்து கொள்கிறோம். அதை (ஜீவனை) குறித்து கேள்வி கேட்கப்பட்டதை நாம் ஜீவியம் முழுவதுமாக கேட்டிருக்கிறோம். நான் ஜீவிக்கிற ஜெபர்ஸன்வில்லில் ஜீவித்த ஒரு சிறு பையனைக் குறித்து எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு நாள் அவன் தன் தாயிடத்தில் சென்று, ''அம்மா, தேவன்,நீர் பேசுகிற இந்த தேவன்,அவர் ஒரு மகத்தான நபர். அவரை யாராவது பார்த்திருக்கிறார்களா? என்றான். அவள், ''மேய்ப்பரை கேள்“, என்றாள். எனவே, அந்தசிறு பையன் மேய்ப்பரிடத்தில் சென்று அவரிடத்தில் கேட்டான்... இல்லை, ஞாயிறுபள்ளி ஆசிரியரிடத்தில் கேட்டான். ஞாயிறு பள்ளி ஆசிரியர், நீமேய்ப்பரிடத்தில் கேட்பது தான் நல்லது“ என்றாள். அவள் அதை அறியாதிருந்தாள். எனவே அவன் மேய்ப்பரிடத்தில் சென்றான். அவர், ''இல்லை, இல்லை, மகனே“, என்றார். தொடர்ந்து அவர், ''ஒருவனும் தேவனை கண்டு ஜீவனோடு இருக்கமுடியாது. எனவே, உன்னால் தேவனை பார்க்கமுடியாது”,என்றார். சரி,அது அந்த சிறு பையனுக்கு ஒரு விதமான ஏமாற்றத்தை கொடுத்தது. 36அங்கே ஒரு வயதான மீனவர் இருந்தார். ஒரு நாள், இவன் அந்த வயதான மீனவரோடு ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்த போது,அங்கே ஒரு புயல் வந்தது. அநேகர் கிழக்கிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்றும் மற்றும் எப்படியாக... இலைகள் யாவும் அடித்து செல்லப்படும் என்றும் நீங்கள் அறிவீர்கள் என்று நான் யூகிக்கிறேன். அவர் படகில் வந்து கொண்டிருந்தார்,அந்த சிறு பையனோ,படகில் கடைசியில் உட்கார்ந்து கொண்டிருந்தான். சூரியன் மேற்கில் அஸ்தமித்துக் கொண்டிருந்தது, வானவில்லும் ஆற்றிற்கு அப்பால் இப்படியாக வந்திருந்தது. அந்தவயதான மீனவர் துடுப்பை போட்டுக் கொண்டிருந்தார். புயல் ஓய்ந்து நதி அமைதலானது, எல்லாம் பச்சைப்பசேலென்று காணப்பட்டு, பூக்களின் நறுமணம் வீசிக்கொண்டிருந்தது. அவர் துடுப்பு வலித்தவாறு, கவனித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய நரைத்த தாடியிலிருந்து பெரிய வெள்ளிக்கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அந்த சிறு பையன் அவர் எதைப் பார்த்து கொண்டிருக்கிறார் என்றுசுற்றும் முற்றும் பார்த்தான். அவன் அந்த வயதான மீனவரை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் படகின் பின்புறத்திலிருந்து ஓடி, படகின் மத்திய பகுதிக்கு வந்து, அந்த வயதான மீனவரின் முட்டிக்கால் அருகில் அமர்ந்து, ''ஐயா, நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். என் தாயாராலும், ஞாயிறு பள்ளி ஆசிரியராலும் அல்லது என் மேய்ப்பராலும் இதற்கு பதில் கூற முடியவில்லை. அவரை (தேவனை) யாராவது பார்த்திருக்கிறார்களா?“ என்றான். அந்த வயதான மீனவர் துடுப்புகளை இழுத்து தன் மடியில் வைத்து, அந்த சிறு பையனின் தலையை தன் தோளின்மேல் சாய்த்து, 'தேனே, தேவன் உன் சிறு இதயத்தை ஆசிர்வதிப்பாராக. கடந்த நாற்பது ஆண்டுகளாக நான் பார்த்ததெல்லாமே தேவன் தான்“ என்றார். அங்கே வெளியில் தேவனைப் பார்ப்பதற்கு இங்கே உங்களுக்குள் தேவன் இருக்கவேண்டும், எப்படியெனில் தேவன் உங்களுக்குள்ளாக இருந்து உங்கள் கண்கள் மூலமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். 37தெருவுக்கப்பால் உள்ள ஒரு மரத்தை நான் பார்க்கிறேன். மொஹாவே பாலைவனம் அல்லது பாலைவனத்தின் ஊடாக இவ்விடத்திற்கு வந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த யாவும் மரித்து போனதுபோல் காணப்பட்டது. நான் கொலராடோ ஆற்றுக்கு நெருங்கி வந்த போது, அங்கே ஒரு புதர்ச்செடி இருந்தது. அது கவனத்தை அவ்வளவாக ஈர்க்கக்கூடியதாயிருந்தது. ''அது எங்கிருந்து அதனுடைய ஜீவனை பெற்றுக்கொள்கிறது“ என்று நினைத்தேன். பாருங்கள், அதனிடத்தில் ஜீவன் இருந்தது. அது ஜீவனையுடையதாயிருந்தது. ஜீவன் என்கிற காரியத்தில் தேவன் இருக்கிறார். ஜீவனோடு இருக்கிற ஒவ்வொன்றும் அது தனக்குள் தேவனை பெற்றிருக்கிறது. ஒரு நாளில், யோபு, ''மரமானது மரிக்குமானல் அது திரும்பவும் ஜீவிக்கிறதாயிருக்கிறது. ஆனால் மனுஷனோ மரித்தபின் படுத்துக் கிடக்கிறான்; அவன் தன் ஆவியை விட்டபின், அவன் எங்கே?அவனுடைய குமாரர்கள் துக்கிக்கவும், அவனுக்கு மரியாதை செலுத்தவும் வந்ததை அவன் அறியாமலிருக்கிறான். ஓ, நீர் என்னை பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைவிடத்தில் வைத்துவையும்“, என்றான். எப்படியாக ஒரு சிறு பூவானது மேலே வந்து நிற்பதை அவன் பார்த்தபோது, அவன் தேவனை அவருடைய இயற்கையிலும், ஜீவனிலும் இருப்பதை கவனித்தான். அது அருமையாயிருந்தன, அந்த மலர்களின் படுகையில் சில இளமையானவைகளும்,சில நடுத்தர வயதுடையவைகளும், சில வயதானவைகளும் இருந்தன. ஆனால் உறைபனி(Frost) வந்து, அவைகளை தாக்கும்போது, அவையெல்லாவற்றையும் அது அழித்து போடுகின்றன. அந்த சிறிய மலரும் அதினுடைய இதழ்களை கீழே விழச்செய்கிறது. மற்றும் அந்த சிறிய மலரின் மொட்டிலிருந்து ஒரு சிறிய கறுப்பு விதை; சிறிதும் ,மிகச் சிறிதுமான விதையானவன் கீழே விழுவான். அது பார்ப்பதற்கு அவ்வளவு விநோதமானதாயிருக்கும்... இருப்பினும் தேவன் அந்த மலருக்கு சவஅடக்க ஊர்வலம் நடத்துவார். அது உங்களுக்கு தெரியுமா? எப்படியெனில் இலையுதிர் கால மழை அதினுடைய துக்கமான கண்ணீர் மழையை பொழியச் செய்து, அழும். அவர் அந்த சிறிய விதையை மண்ணுக்குள் புதைப்பார். அதைத் தொடர்ந்து பனிஉறை (குளிர்) பருவம் வந்து, அதை உறையச் செய்வதினால், வெடிப்புண்டாகி, பசையானது அதிலிருந்து வெளிவரும். நீங்கள் காண்கிற ஒவ்வொரு இயற்கையான காரியமும் இல்லாமற் போகும். 38ஒரு விஞ்ஞானியால் அந்த மண்ணை எடுத்து, ஆய்வுக்கூடத்திற்கு கொண்டு சென்று அதை முன்னும் பின்னும் ஆராய முடியும். ஆனால் உங்களால் அந்த ஜீவகிருமியை கண்டுபிடிக்க முடியாது. அது அங்கே இல்லை. பொட்டாசியம், கால்சியம், பெட்ரோலியம் ஈரப்பதம் மற்றும் அதற்குள்இருந்த ஒவ்வொன்றும் மண்ணுக்குத் திரும்பிவிடும். ஆனால் அதற்குள் எங்கோ அந்த ஜீவகிருமி மறைந்திருக்கும். வசந்த காலத்தில் திரும்பவும் சூரியன் வருவது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயம் அது திரும்பவும் ஜீவனோடுவரும். தேவன் அதற்கு ஒருவழியை கொடுத்திருக்கிறார். குளிர்காலத்தில் நீங்கள் கான்கிரீட் கலவையை எடுத்து உங்கள் முற்றம் எங்கிலும் போட்டு, கற்களைபதியுங்கள். இருப்பினும் உங்களுடைய புல் படுகையிலிருந்து புல் எப்படி வருகிறது? அது சரியாக உங்கள் நடைபாதையின் ஓரம் எங்கிலும் இருக்கிறது. ஏன்? அது என்னவெனில் விதைகள் அங்கு மண்ணில் எங்கும் மறைந்து இருக்கிறது. சூரியன் அந்த தாவர ஜீவன்களின் மீதாக பிரகாசிக்க துவங்கியவுடன், அந்த சிறிய ஜீவ வித்தானது தன் சிறிய தலையை வெளியே கொண்டுவரும் வரைக்கும், அந்த எல்லா கலவை,மற்றும் ஒவ்வொரு பாறைகள், அடியில் இருக்கும் ஒவ்வொரு குச்சிகள் ஊடாக கடந்து வெளியே வந்து, ஜீவனுக்கு அதிபதியான தேவனை துதிக்கும். உங்களால் ஜீவனை மறைத்து வைக்க முடியாது. சகோதரர்களே, ஜீவனைக் கொண்டு வரும்படிக்கு அதற்காகத்தான் நாம் இங்கே இருக்கிறோம். 39கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு வயதான மெதொடிஸ்ட் ஊழியர், அந்த கனிவான வயதுசென்ற பரிசுத்தவானோடு நான் இரவு ஆகாரம் புசித்துக்கொண்டிருந்தேன். அவர் தன்னுடைய ஜீவியத்தில் பரிசுத்த ஆவியை பெற்றிருந்தார். லூயிவில்லிலிருந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த 'விவசாய நேரம்' அதை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். அந்த 4H என்கிற நிறுவனத்தினிடத்தில் ஒரு இயந்திரம் இருந்தது. அதைக் கொண்டு அவர்களால் அவ்வளவு தத்ரூபமான சோள தானியத்தைக் கொண்டு வரமுடியும். எப்படியெனில் வயலில் விளைகிற சோளத்திலிருந்து பெறக்கூடிய சோள அப்பத்துக்கு ஒத்ததாக அதே போன்று ஒன்றை அதினால் கொடுக்கமுடியும் - அதே விதமான சோள துண்டுகளை (சீவல்) பெறமுடியும். உண்மையிலேயே, உங்களால் அதை வெட்டி ஆய்வுக்கூடத்திற்கு கொண்டு வந்து ஆய்வு செய்தாலும்,அதினுடைய இருதயம் சரியான இடத்தில் தான் இருக்கும்,சோளத்திலிருக்கும் அதே அளவு ஈரப்பதமும்,பொட்டாசியமும் இருக்கும். அவைகளை உங்களால் வேறுபிரிக்க முடியாது. ஒரு விசை அவைகளை நீங்கள் ஒன்றாக கொண்டு வருவீர்களானால், எது உண்மை எது போலி என்று உங்களால் வேறுபிரிக்க முடியாது. ஏனெனில் அது அவ்வளவு தத்ரூபமாயிருக்கும் (குறையற்றதாய்). அவர், ''நீங்கள் அவைகளில் எந்தவொன்றை விதைக்கமுடியும் என்று ஒரு வழியில்மட்டுமே உங்களால் கூறமுடியும். இயந்திரத்தினால் செய்யப்பட்டது அழுகிவிடும், அது அவ்வளவு தான். ஆனால் தேவனால் விளைய செய்யப்பட்டதோ, அது திரும்பவும் வளரும்படிக்கு அதற்குள் ஜீவனை கொண்டிருக்கும்“,என்றார். 40ஒரு மனிதன் பார்ப்பதற்கு கிறிஸ்தவனைப் போல காணப்படலாம், கிறிஸ்தவனை போல் பாவனை செய்யலாம், அல்லது கிறிஸ்தவனை போல் நடந்து கொள்ளலாம்,இன்னும் அப்படிப்பட்டவைகளை செய்யலாம்.ஆனால், இருப்பினும் அந்த ஜீவகிருமி (Germlife) அவனுக்குள் இல்லாத பட்சத்தில், அவனால் திரும்பவும் உயிர்த்தெழ முடியாது. இயேசு, ''அவர்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கும்படிக்கு நான் வந்தேன்“,என்றார். அதுதாமே 'ட்ஸோ-ஹே (Zoe)' தேவனுடைய சொந்த ஜீவன் அவர்களுக்குள் இருப்பதாகும். துவக்கத்தை (Beginning) கொண்ட ஒவ்வொன்றுக்கும் முடிவு உண்டு. துவக்கமில்லாத அவைகளுக்குத்தான் முடிவு கிடையாது. ஒரே ஒரு காரியத்திற்கு மட்டுமே துவக்கம் என்பது இல்லை; அதுதேவன். நாம் அவருடைய பிள்ளைகளும், அவருடைய பாகமுமாய் ஆகிறோம்; ஏனெனில்ட்ஸோ-ஹே (Zoe) ஆகிய தேவனுடைய சொந்த ஜீவன், அதாவதுநித்திய ஜீவன் நமக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே அந்த ஒரு வழியில் மட்டுமே நம்மால் ஜீவிக்க முடியும். அந்த ஒரு வழியில் மாத்திரமே இங்கிருந்த நம்முடைய இழந்து போன (Lost) நண்பர்களும், இன்னும் சபை அங்கத்தினர்களும், திரும்பவும் உயிர்த்தெழ முடியும்,அதற்கு காரணம் ட்ஸோ-ஹே அவர்களுக்குள் அருளப்பட்டது, அதில் நாமும் ஒரு பாகமானோம். 41பெந்தெகொஸ்தே நாளை நீங்கள் கவனிப்பீர்களானால், அங்கு வந்த அவருடைய மகத்தான அக்கினி ஸ்தம்பம், அதுதாமே உடன்படிக்கையின் தூதனாகிய இயேசு கிறிஸ்து என்று நம்மெல்லாருக்கும் தெரியும், அது... மோசே, எகிப்தின் பொக்கிஷங்களைப் பார்க்கிலும்கிறிஸ்துவின் நிந்தையை அதிக பாக்கியமென்றெண்ணினான். ஏனெனில் அவன் எகிப்தை புறக்கணித்து,இந்த வெளிச்சமாகிய, அந்த தூதனானவரை பின்பற்றினான். பெந்தெகொஸ்தே நாளில், இந்தமகத்தான வெளிச்சமானது அங்கே வந்த போது, தேவன் தம்மைத்தாமே அவர்களுக்கு பகிர்ந்தளித்தார். அக்கினிமயமான நாவுகள் அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து, அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, ஆவியானவர் அவர்களுக்கு உரைத்தபடி, வேறு பாஷைகளில் பேசத் துவங்கினார்கள். தேவன், தான் ஒரு நபராக இருப்பதிலிருந்து தன்னைத்தானே பிரித்தெடுத்து சபையில் இருக்கும்படிக்கு, தன்ஜீவனை தன் மக்களோடு பகிர்ந்து கொண்டார். நாம் மக்களிடத்திற்கு கொண்டு செல்லக்கூடிய செய்தி அதுவாகத்தான் இருக்கிறது. அதைப் பெறாமல் அவர்கள் அழிந்து போவார்கள். அவர்கள்அதை பெற்றாக வேண்டும். 42என்னுடைய சொந்த தாயார் சமீபத்தில் கடந்து போனார்கள். ஜீவனோடு இருந்த அவளுடைய பிள்ளைகளாகிய நாங்கள் எல்லோரும் அங்கே நின்று கொண்டிருந்தோம்; எங்கள்பத்து பேரில் இரண்டுபேர் கடந்து போய்விட்டார்கள். முதலாவது அவள் டெலோரஸையும் என்னையும் பார்த்து, ''என்னுடைய கடைசியும், முதலுமானவர்களே“, என்றார்கள். எங்களுடைய தாயார் ஒரு கனிவான கிறிஸ்தவள், அநேக வருடங்களுக்கு முன் அவளை கிறிஸ்துவண்டைக்கு வழிநடத்தி, ஞானஸ்நானம் கொடுத்தேன். அவள், ''டெலோரஸ், நீ எனக்கு அருமையானவளாய் இருந்தாய். நீ எனக்கு உதவியாயும் இருந்தாய். எனக்கு வயதாகி முடியாமல் போனபோது நீ எனக்கு அநேக முறை துணிகளை துவைத்துக் கொடுத்திருக்கிறாய். மற்றும் நீ என்வீட்டிற்கு வந்து வீட்டை சுத்தம் செய்து, இப்படிப்பட்ட வேலைகளை நீ எனக்கு செய்து கொடுத்திருக்கிறாய்“, ''தேனே, உன்னைநான் நேசிக்கிறேன்”, என்றாள். வாலிப கிறிஸ்தவளாகிய டெலோரஸ் அங்கே நின்றவாறு தேம்பி அழுதுகொண்டு, கீழே பார்த்து, 'அம்மா, அது மிகவும் கொஞ்சம் தான்“, என்றாள். அவள் (தாயார்), 'பில்லி, நான் பசியாயிராதபடிக்கு நீ என்னை பார்த்துக் கொண்டாய்“, என்றாள். நான், ''அம்மா, நமக்குசாப்பிட ஒன்றுமில்லாத போது, நான் சாப்பிடும்படிக்கு எனக்கு விட்டுக்கொடுத்து அநேக முறை நீங்கள் சாப்பாட்டு மேசையிலிருந்து சாப்பிடாமல் எழுந்து சென்றிருக்கிறீர்கள். உண்மையிலேயே அது ஒரு தாயின் கடமை“, என்றேன். அவள், பில்லி, நீ எனக்கு ஒரு வகையில் ஆவிக்குரிய வழிகாட்டியாயிருந்து, எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தாய். நீ எனக்கு ஜீவமார்க்கத்தையும் தெரியப்படுத்தினாய்“, என்றார்கள். நான், ''அம்மா, உங்களுக்கு தெரியும் நம்முடைய பின்னனி சூழல் (Background) கத்தோலிக்கம் என்று“, என்றேன். ''அப்பொழுதுதான் நான் சபைக்கு சென்றிருந்தேன், அவர்களே 'இது தான் சபை', என்றார்கள். ஆனால் அது வார்த்தைக்கு முரணாயிருந்தது. அதற்கு பிறகு நான் ஒவ்வொரு சபையாக சென்று பார்த்தபொழுது அதுதாமே வார்த்தைக்கு அவ்வளவு முரணாக இருப்பதை கண்டுபிடித்தேன். எனவே நான் வார்த்தையோடு (WORD) தரித்திருக்க வேண்டியதாயிருந்தது, அம்மா, அதற்கு பிறகு நானும் உங்களுக்கு சரியானது எது என்று கூற முயன்று, உங்களை கிறிஸ்துவண்டைக்கு வழிநடத்தினேன்”, என்றேன். பின்னர் அந்த அன்பான வயது சென்ற பரிசுத்தவாட்டி தேவனை சந்திக்கும்படிக்கு கடந்து சென்றார். அதன் பின் அவருடைய ஆத்துமாவை தேவனுக்கு ஒப்புக் கொடுத்தேன். 43டெலோரஸ் என்னை அழைத்து, ''பில்லி, இதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை“, என்றாள். நான், ''டெலோரஸ், நீஜீவிக்கிற இடத்திலிருந்து சாலைக்கு அப்பால் பார். அங்கே ஒரு பெரிய கர்வாலி மரம் (OakTree) நின்று கொண்டிருக்கவில்லையா?“ என்றேன். அவள், ''ஆம்“ என்றாள். இது தாயார் மரிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் நடந்தது. நான், ''இப்போது இலையுதிர்காலம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன் அந்த இலைகள் கண்ணுக்கினியதாகவும், பச்சையாகவும் இருந்தது“, என்றேன். அவள், ''ஆம் பில்“, என்றாள். நான்;, ''இப்பொழுது அது எப்படி காணப்படுகிறது', என்றேன். அவள், ''சரி, அவைமஞ்சள், பழுப்பு, பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கிறது“,என்றாள். நான், ''எது அவைகளை மஞ்சள், பழுப்பு, பச்சை மற்றும் சிவப்பு நிறத்திற்குள்ளாகமாற்றம் செய்கிறது?“ என்றேன். அவள், ''ஏனெனில் அது மரித்துக் கொண்டிருக்கிறது“, என்றாள். நான், ''எப்போது அந்த மரம் மிக கண்ணுக்கினியதாக இருந்தது?“என்றேன். அவள், ''இப்பொழுதுதான்“ என்றாள். நான், ''பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கிறது என்று வேதாகமம் கூறுகிறது“ என்றேன். பாருங்கள். நேரம் வரும்போது அது அவ்விதமாயிருக்கிறது. நான்,''அந்த ஜீவன் திரும்பி போகிறது. ஜீவன் என்பது ஒரு மரமாயிருக்கிறது. நாமெல்லாரும் ஒரு ஜீவவிருட்சத்தில் (மரம்) தொங்கிக் கொண்டிருக்கிறோம்”, என்றேன். அது சரிதான். 44கூட்டங்களில் புத்தக விற்பனையாளரான திரு. வுட் (Mr.Wood), அவர் யெகோவாவின் சாட்சி ஸ்தாபனத்தை சேர்ந்தவராயிருந்தார். அவருக்கு ஒரு பையன் உண்டு. அவன்அவரோடு கூட இருந்தான்; போலியோவினால்அவனுடைய காலானது இப்படியாக சுருங்கியிருந்தது. லூயிவில்லியில் நடந்த கூட்டமொன்றில்கலந்து கொண்டு, அங்கு நடந்த இருதய வகையறுத்தலை (Discernment)அவர் கவனித்தார். எனவே அவர், ''இப்பொழுது இது எனக்கு சரியானதாக காணப்படுகிறது“,என்றார். எனவே கர்த்தருடைய தூதனானவரின் (Angel of the Lord) படம் எடுக்கப்பட்ட ஊஸ்டன், டெக்ஸாஸில் சகோதரன் கிட்ஸன் (Bro. Kidson) மற்றும் அவர்களோடு நான் அங்கே இருந்தபோது, அவரும் அங்கே வந்தார். சரி அது (போட்டோ) அனேக முறை எடுக்கப்பட்டிருக்கிறது, சமீபத்திலும் அது எடுக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியிலும் அது எடுக்கப்பட்டது, இன்னும் அநேக இடங்களிலும் அது எடுக்கப்பட்டிருக்கிறது. 45எனவே சகோதரன் வுட் தன்னுடைய பையனை அழைத்துக் கொண்டு வந்து, அந்த கூட்டங்களில் ஒன்றில் கலந்து கொண்டார். அவர்கள் பின்னாக, ஓ, கிட்டத்தட்ட ஒரு பட்டணத்தின் பாதி தூர அளவுக்கு அல்லது மிக தொலைவில் உட்கார்ந்துக் கொண்டிருந்தார்கள். ஒரு இரவு பிரசங்கபீடத்தில் நின்றுகொண்டு, அவரைப்பற்றி என் ஜீவியத்தில் கேள்விப்பட்டதில்லை, அங்கே நின்று கொண்டு சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு முன்பாக தோன்றின தரிசனத்தை நான் கவனித்து, 'இங்கேஒரு மனிதர் இருக்கிறார். அவர் அங்கே பின்னால் மிகவும் பின்னால் அவரும், அவர் மனைவியும் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார்கள். கென்டக்கி, கென்டக்கி மாநிலத்தில் உள்ள லா கிரான்ஜ்(La Grange) என்னுமிடத்திலிருந்து வந்திருக்கிறார்கள். அவருடைய பெயர் உட் (Wood) அவர் ஒரு தச்சர். போலியோவினால் பாதிக்கப்பட்டு தன்னுடைய கால் செயலிழந்த நிலையிலிருந்த ஒருமகன் அவருக்கு உண்டு. ''கர்த்தர்உரைக்கிறதாவது, அந்த பையன் சுகமானான்“, என்றேன். அது அவ்விதமாகவே நடந்தேறியது. அவருடைய மனைவி ஒரு மெத்தொடிஸ்ட் அல்லது தேவ சபை (Church of God), ஆண்டர்சன் தேவ சபையை சேர்ந்தவர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர், ''ரூபி, அதைநீ கேட்டாயா?“ எனவே அவர்,''டேவிட், எழுந்து நில்”, என்றார். உடனே அவனுடைய செயலிழந்த கால் சுகமடைந்து மற்ற காலைப் போல் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. அவர் இப்பொழுது கூட்டத்தில் இருக்கிறார். அதன் பிறகு அந்த யெகோவா சாட்சிக்காரர் கிறிஸ்துவுக்கு தன்னை ஒப்புக் கொடுத்தார். 46அதன் பின்னர், அதை தொடர்ந்து அவருடைய சகோதரன் வந்து...ஓ, அவர்கள்,அந்த யெகோவாவின் சாட்சியினர் எப்படியாக உணர்வார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள், அவருடைய சகோதரனை அவர்களுடைய ஐக்கியத்திலிருந்து வெளிக் கொண்டு வரவேண்டும் என்று வந்தார்கள். அவருடைய சகோதரன், ''இப்படிப்பட்ட இந்த கள்ள உபதேசங்கள் இங்கே போய்க் கொண்டிருக்கிறது, அப்படிப்பட்ட காரியத்துக்கு நீ செவிகொடுக்கிறாயா“?. என்றார். அவருடையதகப்பனார் யெகோவா சாட்சியில் வேத வாசிப்பாளாராக (Reader) இருந்தார். மேலும் அவருடையசகோதரன், 'இதை காட்டிலும் மேலானதை நீ அறிந்திருக்கிறாய். நான் அந்த மனிதனை பார்ப்பேனென்றால், அவரிடத்தில் இருக்கிற குறையை அவருக்கு நான் எடுத்துச் சொல்வேன். என் தகப்பனார் எப்படிப்பட்ட போதனையை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் எனக்கு தெரியும்”,என்றார். இவர், ''அங்கே வெளியில் புல் வெட்டிக் கொண்டிருக்கிறாரே அது அவர்தான்“ என்றார். உங்களுக்கு தெரியும். நான், கண் கூசலை தடுக்கும் முன்பக்கம் சற்று நீண்டிருக்கும் தொப்பியை அணிந்து கொண்டு, அங்கு வந்து உட்கார்ந்து அவரிடத்தில் பேசத் தொடங்கினேன். அவர், 'நல்லது,திருவாளர். பிரான்ஹாம், நாங்கள் யெகோவாவின் சாட்சி ஸ்தாபனத்தில் வளர்க்கப்பட்டோம்“, என்றார். நான், ''அது மிகவும் நல்லது. நான் வெளிச்சமேயில்லாதவனாய் இருப்பதைக் காட்டிலும் யெகோவா சாட்சியின் ஒரு அங்கத்தினராக இருக்க விரும்புவேன் என்று அவ்விதமாக தொடர்ந்து அவரிடத்தில் பேசிக் கொண்டு, அவர்கூறின எதையும் கண்டுக் கொள்ளாமல், என்னால் முடிந்த மட்டும் சிறந்த முறையில் அவரிடத்தில் பேசி கொண்டிருந்தேன். தொடர்ந்து, ''நீங்கள் திருமணமானவர் என்றும், உங்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டென்றும் நான் காண்கிறேன்“, என்றேன். ஆனால் நீங்கள் உங்கள் மனைவியிடத்திலிருந்து பிரிந்து வாழ்கிறீர்கள்” என்றேன். 47அவர் அப்படியாக பாங்க்ஸை (Bro.Banks) ஏறெடுத்து பார்த்தார். இங்கு கூட்டத்தில் கலந்து கொண்டதிரு. டேவிட் உட்ஸ்வுடைய தகப்பனார். ஒருவேளை திரு. (பாங்ஸ்) வுட் அதை எனக்கு கூறியிருக்கலாம்என்று அவர் நினைத்தார், நானும்உடனடியாக அவர் அப்படியாக நினைப்பதை கண்டுபிடித்தேன். எனவே நான், ''பாங்கஸ் அதை என்னிடத்தில் கூறினார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.ஆனால் அதை அவர் என்னிடத்தில் கூறவில்லை. அவருடைய குடும்பத்தைப் பற்றியும் ஒன்றும் எனக்கு கூறவில்லை“, என்றேன். இதை பாங்க்ஸ் கூறியிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம்... நேற்றைய இரவுக்கு முந்தின இரவில் நீங்கள் செம்பொன்னிறமான தலைமயிர் கொண்ட ஒரு பெண்ணுடன் இருந்தீர்கள். நீங்கள் அவளுடன் ஒரு அறையில் தங்கி இருந்தீர்கள். அப்பொழுது அவளுடைய காதலன் அங்கு கதவண்டைவந்து, கதவை தட்டினான். உங்களை கதவண்டையில்போக விடாமல், அவள் கதவண்டைக்கு சென்றபோது,நீங்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தீர்கள். அது நல்ல காரியமாக போனது, ஏனென்றால்அவன் உங்களை துப்பாக்கியால் சுட்டு உங்கள் மூளையை சிதறடித்திருப்பான்”. தொடர்ந்து நான்,''அவன் சிகப்பு டை கட்டிக் கொண்டு,கருத்த சூட் அணிந்திருந்தான்“, என்றேன். இதைக் கேட்டவுடன், ஓ, அவருக்கு தரையில் விழுகிற மாதிரி இருந்தது. அவர், ''அது உண்மை தான்.அது உண்மை தான்“, என்றார். இதோ அதற்கு பின்; அவருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தேன். அதன் பின் சில நாட்கள் கழித்து இதோ அவருடைய தகப்பனார் வந்தார். தொடர்ந்து அவருடைய சகோதரிவந்தார். இரண்டு பையன்களையும் சரிசெய்யும் நோக்கத்தில் அவள் வந்தாள். அவள் வந்த அதேநாளில், அதே காரியத்தை கொண்டு அவளுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தேன். அதைத் தொடர்ந்து அவருடைய தகப்பனாரும் எங்கள் எல்லோரையும் சரி செய்யும் நோக்கத்தில் வந்தார். எனவே எங்களை பிடிக்கவேண்டும் என்றிருந்தார். 48அவர் ஒரு மீனவர். எனவே, நான், ''பாங்க்ஸ், நாம் அவரை மீன்பிடிப்பதற்கு அழைத்துச் செல்வோம்“, என்றேன். எனவே நாங்கள் ஆற்றை கடந்துசென்றோம். இரவு முழுவதும் மழை பொழிந்திருந்தது. அது கிழக்கில் எப்படியிருக்கும் என்றுஉங்களுக்கு தெரியும். அங்கு நதிகள் யாவும் பெருக்கெடுத்து ஓடி இன்னும் அவ்விதமாக காணப்பட்டது. நாங்கள் வுல்ஃப் கிரீக் அணைக்கு (Wolf Creek Dam) சென்று கொண்டிருந்தோம். அவர் கிறிஸ்தவத்தை பற்றி ஒன்றும் பேசாமல் வந்துக் கொண்டிருந்தார், மிகவும் கண்டிப்புமிக்க வயதான மனிதர். அதே சமயத்தில் அவ்வளவாக புத்திசாலியாகவும் இருந்தார். ஆகவே தான் அவரால் அந்த ஆற்றைக்கடக்க முடிந்தது. நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தபோது அங்கே எனக்கு முன்பாக ஒரு தரிசனம் தோன்றியது, பாங்க்ஸோ வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். நான் அந்த தரிசனத்தை கவனித்தேன். இவ்விதமாக அவர் கூறினார், அந்த இரவில் அவர்,''அது மாதிரி ஏதாவது காரியம் நிகழ்வதை நான் மறுபடியும் பார்ப்பேனேயாகில், நான் அதை விசுவாசிப்பேன்“, என்றார். எனவே அக்காலையில்... கர்த்தருடைய கிருபையினால் தரிசனத்தில் பார்த்ததைஇவ்விதமாக கூறினேன், ''நாம் கடக்கப்போகும் ஒவ்வொரு ஓடையும் சகதியாக இருக்கும். உல்ஃப் கிரீக் அணையண்டை நாம் செல்லும் போது... மழையானது அணைக்குமேல் அல்லது சரியாகச் சொல்லப் போனால் அணைக்கு கீழாக சென்றுவிட்டிருக்கும், அங்குசகதியாவும் இருக்காது, நாம் இன்றைக்கு இங்கே மீன் பிடிப்போம். பின்னர் இங்குள்ள திரு. உட்ஸை நோக்கி,பாங்க்ஸ் உட் நீங்கள் ஒரு சிறிய கெளுத்திமீனை பிடிக்கப் போகிறீர்கள். நானும் ஏறக்குறைய இருபது பவுண்ட் எடைகொண்டதும், அவைகளில் சிலது ஒவ்வொன்றும் கிட்டத்தட்டபத்து பவுண்டு எடை கொண்ட மீன்களையும் பிடிப்பேன். திரும்பவும் அதே தூண்டில் இரையை கொண்டு அதே இடத்தில் நீங்கள் மீன் பிடிப்பீர்கள், ஆனால் உங்களால் ஒன்றையும் பிடிக்கமுடியாது. நாம் இரவு ஏறக்குறைய பதினொறு மணி வரையும் மீன்பிடிப்போம். அதற்குபின் மீன்கள் இரை பிடிப்பதை நிறுத்திவிடும். பின்னர் நாம் உள்ளேசென்று நம்முடைய இரவு ஆகாரத்தை பதினோரு மணிக்கு சாப்பிட்டு, அங்கேயே இராமுழுவதும் தரித்திருப்போம்.அடுத்த நாள் காலை செதில்கள் கொண்ட ஒரு பெரிய மீனை பிடிப்பேன், அது தான் நாம் பிடிக்கப்போகிற கடைசிமீனாக இருக்கும். அதன்பின் மீதமுள்ள நாள் முழுவதும் மீன் பிடிக்க முயன்று,ஒரு மீனையும் பிடிக்கமுடியாமல் போகும்“, என்று கூறினேன். அந்த வயதான மனிதர், ஏதோ அவ்விதமாக சுற்றும் முற்றும் பார்த்தார். நாங்கள் தொடர்ந்து சென்றோம்; அது (தரிசனத்தில்) எவ்விதமாக சொல்லப்பட்டதோ, அதில் சொல்லப்பட்டபடியே அவ்வளவு கச்சிதமாக நடந்தது. அந்த மாலையில் நான் கரையோரப் பகுதிக்கு வந்தவுடன்,அவர், ''இங்கே தண்ணீர் இருக்கிறது. நான் ஞானஸ்நானம்எடுப்பதற்கு தடை என்ன?“ இதோ அந்த முழு குடும்பமும் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள். ஓ, நாமெல்லாரும் அந்த மரத்தில் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருப்பது, அது ஒரு மகிமையான காரியமாயிருக்கிறது. 49எனவே...நானும், திரு. உட்டும் வேட்டையாடிக் கொண்டிருந்தோம். உங்களுக்கு தெரியும், நான்வேட்டையாட விரும்புவேன் என்று. எனவே இன்றிலிருந்து ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன்னர் அங்கே கென்டக்கியில் நாங்கள் வேட்டையாடிக் கொண்டிருந்தோம். அந்த இலையுதிர்காலத்தில் என்னுடைய விடுமுறையில் நான் அங்கே வேட்டையாட சென்றிருந்தேன். நான் ஆப்பிரிக்கா, இந்தியாமற்றும் கிட்டத்தட்ட உலகில் எல்லாவிடங்களிலும் வேட்டையாடியிருக்கிறேன். ஆனால் பனிமூட்டமான ஆகஸ்டு மாதத்திலோ அல்லது அம்மாதத்தில் ஏதோவொரு சமயத்தில் நீண்ட .22 குழாய் துப்பாக்கியை(.22 Rifle) என்னிடத்தில் கொடுங்கள். ஆகவே, நான்அணில்களை வேட்டையாட அவ்வளவாக விரும்புவேன். எனவே நாங்கள் இரண்டு வாரம் தங்கி வேட்டையாடும்படிக்கு கென்டக்கியில் இருந்தோம். அங்கே உண்மையிலேயே வெப்பமாக இருந்தது. இப்பொழுது, கலிபோர்னியர்களாகிய உங்களுக்கு நான்கூறும் இந்த இலைகள் மற்றும் ஒவ்வொன்றும் மிகவும் சூடாவது பற்றி உங்களுக்கு அவ்வளவாக தெரியாது. ஐம்பது கெஜதூரத்திலிருந்து நாங்கள் சரியாக அதினுடைய கண்ணை மட்டுமே சுடுவோம். ஒருவேளை அது நாற்பது கெஜ தூரத்திலிருக்குமானால், நாங்கள் பின்னாக ஐம்பது கெஜ தூரத்திற்கு வந்து, அதினுடைய கண்ணில் சுடுவோம். ஒருவேளை அது கண்ணிற்கு கீழாகவோ அல்லது மேலாகவோ சுடுமானால், நான் என்னுடைய துப்பாக்கியை மாற்றி விடுவேன். அதில் எங்கேயோ தவறு ஏற்பட்டிருக்கிறது, எனவே நாங்கள் குறிபார்த்து சுட்டு பழக்கப்பட்டுப் போனோம். அப்படியாக எனக்கு நானே முயன்றுசரியாக குறிபார்த்து சுட்டு பழக்கப்பட்டு போனேன். 50எனவே, நாங்கள் அங்கே மேலே முகாமிட்டிருந்தபோது, அங்கே உண்மையிலேயே மிகவும் வெப்பமாயிருந்தது. அங்கேயிருந்த சாம்பல்நிற அணில்கள், நீங்கள் தப்பிக்கும் கலைஞன் (escape artist) ஹுடினியை பற்றி பேசலாம்,ஆனால் அவன் அவைகளில் ஒன்றிற்கு கூடஇணையாக முடியாது. கொஞ்சம் மெதுவாக உரசினாலும் கூட, அது உடனடியாக தப்பித்து ஓடிவிடும். நீங்கள் எல்லோரும் சகோதரன் G.H பிரவுனை அறிவீர்கள். ஒரு தடவை அதைப்பற்றிஅவரிடம் கேட்டுப் பாருங்கள். நாங்கள் ஒன்றாக வேட்டையாடியிருக்கிறோம். உங்களுக்கு தெரியும்,அது ஏறக்குறைய அவருடைய மனைவி ஒரு தானியங்கி வேட்டை துப்பாக்கி வாங்கி கொடுத்திருந்தார்கள், அதைக் கொண்டு அவர் அணில்களை வேட்டையாடுவதைநான் கேலி செய்வேன். 51எனவே, நாங்கள் வேட்டையாடிக் கொண்டிருந்தோம். அங்கிருந்த சகோதரன் உட்ஸ் ''உங்களுக்கு தெரியும், சகோதரன்பிரான்ஹாம், இங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிலபள்ளமான நிலங்கள் இருக்கிறது“, என்றார். அப்படிப்பட்டவைகளை நீங்கள் கலிபோர்னியாவில் பெற்றிருக்கமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்.அது ஆழமாய் மிகவும் ஆழமாய் இருக்கும் அங்கே ஓடைகள் அதனூடாக ஓடி அதை ஈரமாக வைத்திருக்கும். அங்கே மேலே அந்த சமமான நிலத்தில் உள்ள புதரை நீங்கள் தொடுவீர்களானால்,உடனடியாக அவைகள் (அணில்கள்) ஓடிவிடும்.உங்களால் அவைகளை பிடிக்க முடியாது. அவை இருநூறுஅல்லது முந்நூறு கெஜம் தூரத்திற்கு ஓடிவிடும். அவைகள் அவ்வளவு துரிதமாக ஓடிவிடும். எனவே, அவர், ''இங்கே நாம் சென்று,அவர் நம்மை வேட்டையாட அனுமதிக்கிறாராஎன்று பார்ப்போம். அவருக்கு ஏறக்குறைய ஐநூறு ஏக்கர்கள் இருக்கிறது“,என்றார். நான், ''சரி, அது அருமையாயிருக்கும்“, என்றேன். எனவே நாங்கள் கடந்து சென்றபோது,இங்கே உங்களுக்கு இருக்கிறது போன்ற அருமையான சாலைகள் அங்கே இல்லை, ஆனால்நாங்கள் அங்கே போய் சேரும்வரைக்கும் பன்றிகள் செல்லும் பாதையிலும்,புதர்கள்,பள்ளங்கள் மற்றும் எல்லா வழியிலும் கடந்து சென்றோம். மேலும் அவர், ''இப்பொழுது, இந்தமனிதனிடத்தில் ஒரு குறை இருக்கிறது. இந்த வயதான மனிதன்,அவர் ஒரு நாத்திகவாதி (தேவன் இல்லைஎன்று கூறுபவர்), ஓ, மற்றும் அவர் முரட்டுத்தனமானவரும் கூட“,என்றார். நான், ''ஓ, நீங்கள் அவரிடத்தில் பேசும்படிக்கு நான் விட்டுவிடுகிறேன்“, என்றேன். எனவே நான் அந்த சிறிய பாரவண்டியில் உட்கார்ந்து கொண்டேன்,அங்கே தூரத்தில் கீழே இருந்த ஒரு அருமையான வெள்ளை நிற வீட்டிற்கு வண்டியை ஓட்டிச்சென்றோம், அந்த வீட்டிற்கு இப்பக்கத்தில் ஒரு பெரிய களைகள் உள்ள நிலமும்,ஒரு பகுதி சோளம் விளைந்த இடமும் இருந்தது.அங்கே நாங்கள் வண்டியை ஓட்டிச் சென்றோம். அங்கே ரொம்பவும் கென்டக்கி வாழ்வு முறையில் பழக்கப்பட்டுப் போன இரண்டு வயதான மனிதர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். கென்டக்கி மாநிலத்தவர்கள் தங்களுக்கென்று தனி வாழ்க்கை பாணியை கொண்டிருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். 52அங்கே பின்னால் இருக்கும் கிரேக்க சகோதரன் டேவிட், அவர் ''சகோதரர் பிரான்ஹாம், நான் உங்களுடைய பிரசங்கத்தை ஒலிநாடாவில்கேட்டேன்“, என்றார். காலை உணவிற்கு பிறகு இதைப்பற்றி பேசுவது ஒரு விதமாக சங்கடமாயிருக்கிறது. எனினும் அவர், ''நீங்கள் பாயாசத்தில் முடி (hairin the biscuit) என்று குறிப்பிட்டீர்கள். நான் அதனுடைய அர்த்தத்தை தேடிப்பார்த்தேன், ஆனால் என்னால் அதினுடைய அர்த்தம் என்னவென்பதை கண்டுபிடிக்க முடியவில்லை”, என்றார். அதற்கு நான், ''பாயாசத்தில் முடி என்பது அப்பட்டமான கென்டக்கி பாஷை. அதை நீங்கள் அகராதியில் கண்டு பிடிக்க வேண்டும் என்று முயற்சிக்காதீர்கள், ஏனெனில் அது அதில் இருக்காது“, என்றேன். 53எனவே நாங்கள் அந்த சாசப்ராஸ் ஹாலோவினிடத்திற்கு (sassafras hollow - ஏரி ஓரங்களில் அமைந்திருக்கும் சுற்றுலா குடில்கள்), உங்களுக்கு தெரியும், திரும்பி வந்தோம், அங்கே அந்த பெரிய பழமையான தொப்பிகள் தொங்கிக் கொண்டிருந்தன. அங்கே நாங்கள் வண்டியை நிறுத்தினோம், சகோதரன் உட் வெளியே இறங்கி, நடந்து சென்றார். அங்கே இரண்டு வயதான மனிதர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள், அவர்களில் ஒருவரிடத்தில் அவர் நடந்து சென்றார். அவர் இவரை கூப்பிட்டு, ''எப்படி இருக்கிறீர்கள்?“, என்றார். அவரும், ''நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், ஐயா?“ என்றார். 'என்னுடைய பெயர் உட், பேங்க்ஸ் உட்”,என்றார். நாங்கள் இங்கே இருக்கிற டட்டனில் (Dutton) வேட்டையாடிக் கொண்டிருக்கிறோம்... அவர்கள் அங்கு ஓடுகிற ஓடையைக் கொண்டு (Greeks) அவ்விடங்களுக்கு பெயர் வைப்பார்கள். நாங்கள் இங்கே டட்டனில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, உங்களுடைய இடத்தில் ஏன் வேட்டையாடக் கூடாது என்று நினைத்தோம். அவர், ''நீ எந்த குடும்பத்தை சேர்ந்த உட்“,என்றார். அவர், ''நான் ஜிம் உட்டின் மகன்“, என்றார். ''அவர்கள் ஒரு கூட்ட யெகோவா சாட்சிகள் மற்றும் உத்தமமான ஜனங்களும் கூட. ஜிம் உட் குடும்பத்தை சேர்ந்த எவராகிலும், இங்கே எனக்கு இருக்கிற எவ்விடத்திலும் அவர்கள் வேட்டையாட வரவேற்க்கப்படுகிறார்கள்“,என்றார். தொடர்ந்து, ''வயதான ஜிம் இன்னும் ஜீவிக்கிறாரா?” என்றார். அவர், ''ஆம், இப்பொழுது அவர் இந்தியானாவில் ஜீவிக்கிறார். நானும் அங்கு தான் ஜீவிக்கிறேன். ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும் நான் வேட்டையாட வருவேன்“, என்றார். 54''சரி, உங்களுக்கு நீங்களே உதவி செய்துகொள்ளுங்கள். எனக்கு ஐநூறு ஏக்கர்கள் உண்டு மற்றும் அதிகமான ஏரியோர குடில்கள் இன்னும் மற்ற காரியங்கள்இருக்கிறது. உங்களுக்கு நீங்களே உதவிசெய்து கொள்ள வேண்டும்“,என்றார். அவர், ''நல்லது. உங்களுக்கு மிக்க நன்றி. என்னோடு கூட என்னுடைய மேய்ப்பரையும் அழைத்து வந்திருக்கிறேன். அவரும் இங்கே வேட்டையாடுவதில் உங்களுக்கு எந்த ஆட்சேபனை இல்லை என்று நான் நினைக்கிறேன்“, என்றார். அவர், ''உட், நீங்கள் எங்கு சென்றாலும் உங்களோடு கூட ஒரு பிரசங்கியை அழைத்து செல்லும் அளவுக்கு நீங்கள் அவ்வளவு கீழ்தரமாகிவிட்டீர்கள் என்று என்னிடத்தில் கூற முற்படுகிறீர்களா?“ என்றார். எனவே நான் காரைவிட்டு வெளியே வரகூடிய நேரம் அது என்று எண்ணினேன்.எனவே நான் காரைவிட்டு வெளியேறி, உங்களுக்கு தெரியும், அவ்விடத்திற்கு நடந்து சென்று,''எப்படி இருக்கிறீர்கள்?“ என்றேன். அவரும், ''நலமா“, என்றார்.அவர்கள் என்னை அவரிடத்தில் அறிமுகப்படுத்துவதற்கு முன்னமே, அவர் முந்திக் கொண்டு, ''நல்லது. உங்க மாதிரி ஆட்களுக்கு என்னால் ஒரு பிரயோஜனமும் கிடையாது”, என்றார். நான், ''நல்லது, நான்உங்களுடைய உத்தமத்தை மெச்சுகிறேன்“, என்றேன். தொடர்ந்து, ''நான் அதைக் கூறக் காரணம், இந்த ஒரு காரியம் தான். முதலில், நீங்கள் பார்ப்பதற்கு ஒரு பிரசங்கியைப்போல் காணப்படவில்லை“, என்றார். என் மேல் இருந்த அணிலின் இரத்தம், என்னுடைய குறுந்தாடி மற்றும் இரண்டு வாரமாக குளிக்காமல் இருந்ததை... ம்ம். ஆகவே நான், ''நல்லது,அது சரிதான் என்று நான் யூகிக்கிறேன்”, என்றேன். 55அவர், 'நான் உங்களுக்கு (பிரசங்கிமார்) எதிராக இருப்பதற்கு காரணம் என்னவெனில், நீங்கள் ஒன்றுமில்லாத மரத்தை பார்த்து குரைக்கிறீர்கள்“, என்றார். இப்பொழுது, அதினுடைய அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியாது. அது இன்னொரு கென்டக்கிய பாஷை. டேவிட், அதை நீங்கள் அகராதியில் கண்டு பிடிக்க முயற்சிக்க வேண்டாம். கூன் பிராணியை வேட்டையாடும் நாய், பொய்யானதை (இல்லாததை) பார்த்து குரைக்கும்பட்சத்தில், அது ஒரு மரத்தை பார்த்து ஓடும். கூன்பிராணி தந்திரமானது, (Coon,கூன் - சாம்பல் நிறத்தில், நரியைப்போல் காணப்படும் மரம் ஏறும் ஒரு சிறிய பிராணி) எப்படியெனில்,அது ஓடி மரத்தில் ஏறி பின்னர் அங்கிருந்து குதித்து தப்பித்து ஓடிவிடும். பாருங்கள். ஆகவே சரியாக பழக்கவிக்கப்படாத ஒரு நாய், கூன் ஏறின மரத்தைப் பார்த்து அதினிடத்தில் ஓடி, அந்த மரத்தை சுற்றியுள்ள நாயின் தடத்தைமோப்பம் பிடித்து, அங்கேயே நின்று அந்த மரத்தைப் பார்த்து குரைக்கும். ஆனால் அந்த மரத்திலோ ஒன்றுமேயில்லை. ஆகவேவழக்கமாக அப்படிப்பட்ட நாயை சுட்டுவிடுவார்கள். எனவே, உங்க மாதிரி ஆட்களுக்கு... போதுமான பெரிய தோட்டாக்கள், அது தான் உங்களுக்கு தேவை, ஏனெனில் அங்கே ஒன்றுமேயில்லாத ஒரு மரத்தைப் பார்த்து குரைக்கிறீர்கள். பிரசங்கிப்பதைக் குறித்து நான் கூறுகிறது என்னவென்று உங்களுக்கு தெரியும். மேலும் அவர், 'நான் ஒரு மத நம்பிக்கையற்றவன் என்று கருதப்படுகிறேன்“, என்றார். அதற்கு நான், 'நல்லது, ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கென்று தனிப்பட்ட கருத்திருக்கும். ஆனால் எனக்கு, அதைக்குறித்து பெரிதாக பேசுவதற்கு ஒன்றுமில்லை“, என்றேன்;. 56அவர், ''நல்லது, காரியம் என்னவெனில், நீங்கள் பிரசங்கிக்கிற அப்படிப்பட்ட காரியம் இல்லாத பட்சத்தில், அது இருப்பதாக பிரசங்கிக்கிறீர்கள்“, என்றார். நான், ''ஆம் ஐயா, நிச்சயமாக அது உங்களுடைய கருத்தாயிருக்கிறது“, என்றேன். அவர், ''சரி, மனிதர்களாகிய நீங்கள் தேவனை குறித்து பேசுகிறீர்கள், ஆனால் அப்படிப்பட்ட ஒருவர் இருந்திருப்பாரானால், அவரை நான் பார்த்திருப்பேன். இவ்வளவு வருடங்களாக நான் ஜீவித்திருக்கிறேன். எனக்கு எழுபதுமற்றும் அதற்கு கொஞ்சம் அதிகமான வயதாகிறது. இது வரைக்கும் அப்படிப்பட்ட, ஒருவரை நான் பார்த்ததேயில்லை. அப்படிப்பட்டஒரு காரியமே கிடையாது, உங்கமாதிரி ஆட்கள் தவறான மரத்தைப் பார்த்து குரைக்கிறீர்கள். உங்களுடைய பிழைப்புக்காக மக்களுடைய பணத்தை எடுத்துக் கொண்டு, இன்னும் அப்படிப்பட்ட காரியங்களை செய்கிறீர்கள், நீங்கள் ஒரு கூட்ட ஏமாற்றுக்காரர்களே தவிர வேறொன்றுமில்லை“, என்றார். நான், ''ஓ, என்னே“ என்று எண்ணினேன். தொடர்ந்து நான், ''ஆம் ஐயா,நிச்சயமாக அது உங்களுடைய கருத்து”. ''ஓ, தேவனே, நீர்மட்டும் எனக்கு உதவி செய்யாத பட்சத்தில்...“ என்று எண்ணினேன். எனவே, நான், ''ஆம், ஐயா, அது உங்களுடைய கருத்தாகும்”, என்றேன். 57என்னுடைய தாயார் உங்களுக்கு தெரியும், என்னுடைய வயதான தெற்கத்திய தாயார், எனக்கு எப்பொழுதும் நல் ஆலோசனையை வழங்குவார்கள். ஒரு சமயம் எனக்கு ஒரு வாக்கியத்தை கூறினார்கள். அவள், ''ஒரு மாட்டுக்குஅது போகிற போக்கில் போதுமான அளவுக்கு கயிற்றை விடும்போது, அது அதே கயிற்றை கொண்டு அதில் சிக்கிக்கொள்ளும்“, என்பார். கவனியுங்கள். எனவே அது தான்அவருக்கு ஏற்றது என்று நான் எண்ணினேன்; அப்படியாகஅவரை தொடர்ந்து பேசவிட்டு, கொஞ்சநேரம் குரைக்க விட்டுவிட்டேன், அதன் பின்னர் அவர் எந்த மரத்தின் மேல் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள முடியும். எனவே நான் அவர் தொடர்ந்து பேசும்படிக்கு விட்டு, அதன்பின்னர் அவரிடத்தில் ஒரு காரியத்தை கண்டுபிடித்தேன். அப்பொழுது எனக்கு ஒரு காரியம்நினைவுக்கு வந்தது. அங்கே அவர்கள் ஒரு ஆப்பிள் மரத்தின் கீழாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த வருடத்தின் இளையுதிர் காலத்தில் கீழே விழுந்த ஆப்பிள்களை,மஞ்சள் நிற பட்டையான அமைப்பை கொண்டகுளவிகள், (Yellow Jackets) அவைகளை தின்று கொண்டிருந்தன.எல்லோ ஜாக்கெட்ஸ் என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியுமா? சரி. நல்லது,நீங்கள் கென்டக்கியின் எந்த பாகத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்? பாருங்கள். பின்னர் அவரிடத்தில், ''அந்த ஆப்பிள்களில் ஒன்றை நான் எடுத்துக் கொள்வதில் உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையே“, என்றேன். அவர், ''உங்களுக்கு நீங்களே உதவிசெய்து கொள்ளுங்கள். மஞ்சள் பட்டைகொண்ட குளவிகள் அவைகளை தின்று கொண்டிருக்கின்றன“, என்றார். 58எனவே நான் சென்று, அதை (ஆப்பிளை) எடுத்து, இந்த இரத்தக்கறை படிந்த பழைய நீண்டகால்சட்டையில் துடைத்து, அதைகடித்தேன். நான், ''ஓ, இது ஒரு சுவையான ஆப்பிள்“, என்றேன். அவர், ''ஆம். அது மிகவும் சுவையானது“, என்றார். நான், ''இவள் (ஆப்பிள் மரம்) அதிகமான பழங்களை கொடுக்கிறதாக காணப்படுகிறது”, என்றேன். அவர், ''ஆம் ஐயா. ஒவ்வொரு வருடமும் நான் அதிகமான பழங்களை பெற்றுக் கொள்கிறேன்,“ என்றார். உங்களுக்கு தெரியும், நான்அவரிடத்தில், 'இந்த மரத்திற்கு எவ்வளவு வயதிருக்கும்,“என்று விசாரிப்பது போல் அவரிடத்தில் பேச்சை மாற்றினேன். அவர், அந்த பழைய புகைபோக்கி (Chimney) அங்கே தூரத்தில் நிற்கிறதை உன்னால் பார்க்க முடிகிறதா?,“ என்றார். ''அங்குதான் நான் பிறந்தேன். அம்மாவும், அப்பாவும் அதில் ஜீவித்தார்கள், ஆனால் நெருப்பு அதை (வீட்டை) தீக்கிரையாக்கினது. அதன் பின்னர் இந்த புதிய வீட்டை இங்கே நாங்கள் கட்டினோம். இங்கே தான் நான் வளர்க்கப்பட்டேன்,” என்றார். தொடர்ந்து அவர், ''அம்மாவும், அப்பாவும் மரித்த பிறகு,நான் இந்த வீட்டிலேயே தங்கிவிட்டேன். நாங்கள் இங்கே குடிபெயர்ந்தபோது, நான் அந்த மரத்தை நாற்பதோ, ஐம்பதோ அல்லது ஏதோ அவ்வளவு வருடங்களுக்கு முன்னர் அதை நட்டேன், அது முதற்கொண்டு அது அங்குதான் இருக்கிறது“, என்றார். நான், ''அது நல்லது. என்னே, அது அருமையாயிருக்கிறது,“ என்றேன். 59அவர், ''ஆம், ஐயா“,என்றார். அவர்,''நீங்கள் ஒரு பிரசங்கியாக இருப்பதினால், விஷயத்திற்கு வருவோம், நான் உங்களிடத்தில் ஒன்றை கேட்க விரும்புகிறேன்“,என்றார். நான், ''ஆம் ஐயா. அது என்ன?“, என்றேன். அவர், 'உங்களை மாதிரி ஆட்கள், நீங்கள் எதையாவது உற்பத்தி செய்யும் போது, ஏன், அது வித்தியாசமானதாகவே இருக்கிறது“,என்றார். ஒரு சமயம் ஒரு பிரசங்கியைக் குறித்து கேள்விப்பட்டேன். தொடர்ந்து அவர், ''இங்கே மலை மேலாக ஒரு வயதான ஸ்திரி (யாரோ ஒருவர்) இருந்தாள். அவள் புற்றுநோயினால் மரித்துக் கொண்டிருந்தாள். ஒரு சமயம் ஒரு பிரசங்கி இங்கே கென்டக்கியில் உள்ள (சரி, அது அங்கிருந்து ஏறக்குறைய முப்பது மைல்கள் இருக்கும். உட்ஸ் என்னை நோக்கிப் பார்த்தார், நானும் தலையை அசைத்தேன்), ஏக்டனில் (Acton) இருக்கும் மெதோடிஸ்ட் கேம்ப் கிரவுண்டிற்க்கு வந்திருந்தார். இந்த பிரசங்கி, தொலைவில் உள்ள இந்தியானாவில் இருந்து வந்திருந்தார். அவர் அங்கே வந்திருந்தபோது, ஏறக்குறைய இரண்டாயிரத்தி ஐநூறு பேர் அந்த இரவில் அங்கே கூடி வந்தார்கள் என்று சொல்லப்பட்டது“, என்றார். உங்களுக்குத் தெரியும்,அது அங்கே தொலைவில் உள்ள குன்றுகளின் மேல் நடந்தது. அங்கு அவர்கள் வருவதற்கு குதிரைகள் மீதும் இன்னும் அநேக வழிகளிலும் வரவேண்டியதாயிருந்தது. 60அவர், 'அவர் (பிரசங்கி) அங்கு மூன்று இரவுகள்இருந்தார். இரண்டாவது இரவு கூட்டத்தில், கேம்பல்ஸ்வில்லில் (Campbellsville) வாழ்ந்து வந்த இந்த வயதான சீமாட்டியின் சகோதரி (அக்கூட்டத்திற்கு) வந்திருந்தாள். இந்த பிரசங்கியார் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்தினரின் கடைசியில், பின்பகுதியில் இருந்த இந்த ஸ்திரியைபார்த்து, அவளுடைய பெயரை சொல்லி அழைத்து, ''இன்றிரவு, நீ வீட்டைவிட்டு கிளம்புவதற்கு முன், உடைகளை வைக்கும் அலமாரியின் இழுப்பறையில் இருந்து, ஒரு ஓரத்தில் நீல நிற படம் போட்டிருந்த ஒரு சிறிய கைக்குட்டையை கொண்டு வந்திருக்கிறாய். அதை உன் கைப்பையில் வைத்திருக்கிறாய், வயிற்றுப் புற்று நோயினால் மரித்துக்கொண்டிருக்கிற இன்ன - இன்ன பெயரைக் கொண்ட ஒரு சகோதரி உனக்கு உண்டு. நீ அந்த கைக்குட்டையைஎடுத்து, அந்த ஸ்திரியின் மீது வை,அவள் சுகத்தைப் பெற்றுக் கொள்வாள்,“ என்றார். ''நல்லது, அந்த இரவு கூட்டத்தில் கிட்டத்தட்ட நடுஇரவில், இரட்சண்ய சேனை கூட்டத்தினர் தான் அந்தகுன்றின் உச்சிக்கு வந்திருக்கிறார்கள் என்று நாங்கள் நினைத்தோம். என் வாழ்நாளில் அப்படிப்பட்ட ஆரவாரத்தை நான் கேட்டதேயில்லை, அவர்கள் அப்படியாக கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். உங்களுக்கு தெரிந்திருக்குமானால் அது சகோதரன்பென்னும் மற்றவர்களும் அங்கே மேலே (குன்றில்) அந்த கைக்குட்டையை அந்த ஸ்திரியின் மேல் வைத்தார்கள். அவர் தொடர்ந்து, 'ஒருவேளை அந்த வயதான சீமாட்டி மரித்துப்போயிருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். ஆகவே அவர்கள் அந்த சீமாட்டியின் சவ ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருக்கலாம் என்று நாங்கள் நினைத்து அங்கே சென்றபோது, அவள் தன்னுடைய புருஷ-னோடு அங்கு மேஜையில் உட்கார்ந்தபடி பொரித்த ஆப்பிள் பணியாரத்தை (Apple Pie) சாப்பிட்டுக் கொண்டு, காபியை பருகிக் கொண்டிருந்தாள்“. 61அரைநிலவு வடிவத்தில் காணப்படும், பொறித்த ஆப்பிள் பணியாரம் (சோமாஸ் வடிவில் இருக்கும் ஒருவகை பணியாரம்) என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? நிச்சயமாக நான் வீட்டிலிருப்பதை போல் உணர்கிறேன். அதின் மேல் சர்க்கரைப் பாகு (Molasses) ஊற்றி சாப்பிடுவதை நான் அதிகமாக விரும்புவேன். அதின் மேல் சர்க்கரைப்பாகு தெளித்து சாப்பிடுவதை நான் விரும்பமாட்டேன். அதை சர்க்கரைப் பாகுக்குள் முழுவதும் மூழ்கி, உங்களுக்குதெரியும், அதை முழுக்கு ஞானஸ்நானம் செய்து சாப்பிட விரும்புவேன். நான் சாப்பிடும் ஆப்பிள் பணியாரத்தின் மேல் அதிகமான பாகு இருப்பதை விரும்புவேன். எனவே அப்படிப்பட்டவைகளை நான் அதிகமாக விரும்பி சாப்பிடுவேன். எனவே, அவள் இந்த ஆப்பிள் பணியாரத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். 'அதற்கு முந்தின நாள், அவர்களால் ஏதும் செய்யமுடியாத... அவ்வளவாக ஒரு கஷ்ட நிலையில் அவள் இருந்தாள். அவளை நோயாளியின் கழிகலத்தில் (Bedpan) வைக்க முடியாததால், இழுவை விரிப்பை (draw sheet) பயன்படுத்த வேண்டியதாய்யிருந்தது. அதற்கு ஆறுவாரத்துக்கு முன்னமே மருத்துவர் அவளை கைவிட்டுவிட்டார் மற்றும் மரிக்கும் மட்டும் அவளுக்கு போதுமான அளவு ஃபினோபார்விடால் (Phenobarbital - நரம்புகளுக்கு அமைதி கொடுத்து, தூக்கம் உண்டாக்கும் மருந்து) கொடுத்திருந்தார். மருத்துவரும் அவளுக்கு அறுவைசிகிச்சை செய்து திறந்து பார்த்து, திரும்பவும் மூடிவிட்டார்கள், காரணம் அவளுக்கு தொடர்ந்து சிகிச்சை செய்வது புத்திகெட்ட காரியம் என்று எண்ணினார்கள். உங்களுக்கு தெரியும்,அங்கு உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அவள், எங்களை கண்டதும் துள்ளிக் குதித்து,ஓடிவந்து எங்களிடத்தில் கைகுலுக்கினாள்“, என்றார். நான், ''அவ்விதமாய் நீங்கள் பேசவேண்டாம்“, என்றேன். அவரோ, ''நிச்சயமாக, நீங்கள் நம்பவில்லையென்றால், நேரில் சென்று பாருங்கள். அதை அவளே உங்களிடத்தில் கூறுவாள்”. பாருங்கள், அவர் எனக்கு பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் அவர் சாட்சி சொல்லட்டும் என்று நான் அவரை விட்டுவிட்டேன். 62நான், ''ஓ, நீங்கள் அதை நம்பமாட்டீர்கள், அப்படித்தானே“, என்றேன். அவர், ''நிச்சயமாகநான் நம்புகிறேன். நீங்கள் அதை நம்பவில்லையென்றால், அந்த குன்றிற்க்கு நீங்களே சென்று அதை அறிந்துகொள்ளுங்கள். நான்உங்களை அங்கே அழைத்து செல்கிறேன்“, என்றார். நான், ''ஊ... இல்லை,அதைக் குறித்ததான உங்களுடைய வார்த்தையை நான் ஏற்றுக் கொள்கிறேன் (நம்புகிறேன்). அதைக் குறித்ததான உங்களுடைய வார்த்தையை நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்த நபர் (பிரசங்கியார்) யார் என்று சொல்லுங்கள்“,என்றேன். அவர், ''எனக்குத் தெரியாது“, என்றார். ''அவர் இந்தியானாவிலிருந்து வந்தார் என்றும், திரும்பவும் இங்கே வரப்போகிறார் என்றும் சொல்கிறார்கள். அவர் வரும்போது நான் அவரை சந்திக்கப்போகிறேன்”. மேலும் நான் அவரிடத்தில் நேரிடையாகசென்று, ''பிரசங்கியே, நான் உங்களிடத்தில் ஒரு காரியத்தை கேட்கப்போகிறேன், இந்த தேசத்தின் இப்பகுதிக்கு வருவதற்கு முன்னமே, இங்கே அவளுக்கு இருக்கும் அந்த காரியம் எப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்பேன்“, என்றார்.(அவ்விடத்திற்கு இதற்கு முன் நான் சென்றதில்லை, பாருங்கள்). ''அதைஎப்படி நீங்கள் அறிவீர்கள்?”, என்றார். நான் ''ஆம்,ஐயா. நல்லது, அவரை (அந்த பிரசங்கியை) நீங்கள் சந்திப்பீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அவர் உங்களுக்கு உதவுவார் என்றும் நான் நம்புகிறேன்“, என்றேன். அவர், ''ஆம், நான் அவரை சந்திப்பேன்“, என்றார். உங்களுக்கு தெரியுமா, புகையிலையைமென்று கொண்டிருந்த அவர், அதை அப்படியாக கீழே துப்பினார். 63நான், ''திரும்பவும் இந்த மரத்தைப் பற்றி பேசும்படிக்கு...நீங்கள் என்னிடத்தில் இப்பொழுது குறிப்பிடுகிறீர்கள்“, என்றேன். தொடர்ந்து, ''உங்களுக்கு தெரியும்,அங்கே எங்களுக்கு ஒரு குளிர்ந்த இரவோ,உறைபனியோ, வேறெதுவும் இருந்ததில்லை. அங்கேயும் மரத்திலிருந்து அதினுடைய இலைகள் கீழே விழுகின்றன. ஆகவேதான், நாங்கள் அங்கே இலைகள் கீழே விழுந்து, காய்ந்து போயிருக்கும், பெரும்பாலும் காட்டுத்தீயினால் எரிந்து போயிருக்கும் அதுபோன்றதான காடுகளிலிருந்து (Flat - wood), இலைகள் தண்ணீர்கள் மேல் விழுந்து,ஈரமாய் இருக்கும் இந்த பள்ளமான நிலங்களுக்கும் வருகிறோம். எனவே இவ்வுலகில் இங்கிருக்கும் இந்த மரங்களிலிருந்து ஏன் இலைகள் விழுகின்றது என்று எனக்கு சொல்லுங்கள்”, என்றேன். அவர் ''சரி, ஜீவன் அதை விட்டு கடந்து போயிருக்கும்“, என்றார். நான், ''என்னது“, என்றேன். அவர், ஜீவன் அதை விட்டு கடந்து போயிருக்கும்“, என்றார். நான், ''இலையை விட்டு கடந்து போனதா?“ என்றேன். அவர், ஆமாம். அதுதான் அதனை (இலைகளை) கீழே விழும்படி செய்கிறது“, என்றார். நான், ''சரி, எங்களுக்கு எந்த விதமான உறைபனியோ அல்லது குளிர்கால அடையாளமோ இருந்ததில்லை“, என்றேன். அவர், ''ஆமாம், அதனால் தான் அது அதைவிட்டு கடந்து போகிறது“, என்றார். மறுபடியும் நான், ''சரி, அந்த ஜீவனுக்கு என்ன நிகழ்கிறது“, என்றேன். அவர், அது மரத்தின் கீழாக இருக்கும் வேருக்கு போகிறது“, என்றார். நான், ''நீங்க என்ன சொல்கிறீர்கள்“, என்றேன். அவர், ''ஆமாம், ஏனென்றால் குளிர்கால பனி அதை உறைந்து போகச்செய்து, அந்த மரத்தில் இருக்கும் ஜீவனை கொன்று போடும்“, என்றார். நான், ''அப்படியானால் அது மறைந்து கொள்ளும்படிக்கு மரத்தின் வேருக்கு செல்கிறது. அங்கு அது எதுவரைக்கும் மறைந்திருக்கும்“, என்றேன். அவர், ''அது வசந்த காலம் வரைக்கும் (Springtime)“,என்றார். நான், ''அது மறுபடியும் அதிகமான ஆப்பிள்களையும், ஒரு கூட்ட இலைகளையும் கொண்டு வரும்தானே?“ என்றேன். அவரும், ''ஆம், ஐயா“, என்றார். 64நான், ''ஹு, அது விநோதமாயிருக்கிறது. நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்“,என்றேன். அவர், 'ஆம்,ஐயா“, என்றார். நான், எந்த ஞானம் (intelligence) அந்த மரத்திற்கு, அதாவது அந்த மரத்தில் இருக்கும் ஜீவனுக்கு இப்படி கூறினது; 'பனிக்காலம் (Winter) வருகிறதென்றும், நீ இந்த கிளைகளிலிருந்து இறங்கி, அங்கே கீழாகச் சென்று, அந்த வேக்குள் உன்னை மறைத்துக்கொள்ளவில்லையென்றால் நீ மரித்து போவாய்' என்று கூறினது. அம்மரத்தின் ஜீவனும் அந்த ஞானத்திற்குக் கீழ்படிந்து, அந்த மரத்தின் வேருக்கு சென்று, பனிக்காலம் முடியும் வரைக்கும் அங்கேதரித்திருந்து திரும்பவும் அது இலைகளை முளைக்கசெய்கிறது“, என்றேன். எனவே நான், ''எந்த ஞானம் அந்த மரத்திற்கு அதை செய்கிறது, ஐயா” என்றேன். உடனே அவர், ''ஓ, அது இயற்கை“, என்றார். நான், இயற்கை என்றால் என்ன?“ என்றேன். அவர், ''ஆமாம், அது அவ்விதமாக இயற்கையாகவே நடக்கிறது“, என்றார்.அவர், நான் சொல்லவருகிற முக்கிய கூற்றை புரிந்துகொண்டு, அதிலிருந்து நழுவி விலகிப் போக முயற்சித்தார். எனவே, ''அவர், நல்லது, அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா...“ என்றார். 65நான், ''சரி, அது என்னவென்று நான் உங்களுக்கு சொல்லட்டும். நாம் தண்ணீர் நிறைந்த ஒரு வாளியை (Bucket) எடுத்து, இங்கிருக்கும் அந்த கர்வாலி மர கம்பத்தில் வைக்கலாம். இப்பொழுது, அது ஆகஸ்ட் மாத இறுதியில், அந்த கம்பத்தின் அடிப்பகுதிக்கு விரைந்து சென்று, வசந்த காலம் வரை அங்கேயே தரித்திருந்து, மறுபடியும் திரும்பி வந்து அந்த வாளியைநிரப்பும். அது அப்படி செய்யுமா? அவர், ''இல்லை, இல்லை“, என்றார். நான், ''சரி, அப்படியானால் எந்த அறிவு அந்த மரத்திற்கு அப்படி செய்யும்படி சொன்னது?எனவே, அது ஒரு அறிவுதிறனாக இருக்க வேண்டும், ஏனெனில் மரத்திற்கு அப்படிப்பட்ட அறிவுகிடையாது. எனவே அந்த ஜீவனை மரத்தின் கிளைகளின் மேலிருந்து கீழேயிருக்கும் வேருக்குவரும்படி செய்வது அது ஒரு அறிவாக இருக்கவேண்டும் மற்றும் திரும்பவும் இது மேலே திரும்பிவரக்கூடிய நேரமென்று கூறுவதும் ஒரு அறிவாக இருக்கவேண்டும். அவர், ''அதை நான் அப்படி நினைத்துப் பார்க்கவில்லை“, என்றார். நான், இப்பொழுது, அதைக் குறித்து நீங்கள் வெகுநேரம் எடுத்துக்கொண்டு சிந்தித்து பாருங்கள். எந்த அறிவு, அந்தமரத்தின் தாவரசாறிலிருக்கும் (Sap) ஜீவனிடத்தில், 'நீ வேருக்கு சென்று உன்னை மறைத்துக் கொள்ளவில்லையென்றால் நீ மரித்துப்போவாய்' என்று எந்த அறிவு அதற்கு கூறினது என்றுநீங்கள் கண்டுபிடிப்பீர்களானால்; அப்பொழுது நானும் அந்த ஸ்திரி யார் என்றும், அவளுடைய ஜீவனை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று கூறின அந்த அறிவு எது என்றும் நான் சொல்வேன்“, என்றேன். அவர், நீங்க தான் அந்த பிரசங்கியா?“ நானும், ''ஆமாம், நான் தான்“, என்றேன். 66அது தான் உண்மை. அது மிக எளிமையாக இருப்பினும், ''ஜீவ மார்க்கத்தை நீர் எனக்கு தெரியப்படுத்தினீர்“அங்கேதாமே, அவர் தன்னுடைய தொப்பியை கழட்டி, முழங்கால்படியிட்டபோது, நான் அவரை கிறிஸ்துவண்டையில் வழி நடத்தினேன். ''உம்முடைய ஜீவமார்க்கத்தை எனக்கு தெரியப்படுத்தினீர்”, உண்மையிலேயே தன்னுடைய சொந்த பெயரைக்கூட எழுத தெரியாத அந்த படிப்பறிவில்லாத விவசாயிக்கு அப்படி செய்தார். ஆனால் தேவன் அந்த ஜீவமார்க்கத்தில் அவரை வழிநடத்தும் படிக்கு அவர்தனக்கென்று ஒரு சொந்த வழியை வைத்திருக்கிறார். எனவே, சகோதரர்களே நாம் அந்த ஜீவ விருட்சத்தில்தொங்கிக் கொண்டிருக்கிறோம். என்றாவது ஒரு நாளில் இந்த வயதான இலையானது அதிலிருந்து விழும். ஆனால் என்றாவது ஒரு நாளில் ஒரு உயிர்த்தெழுதல் நடக்கபோகிறது. நமக்கு முன்பாக ஒரு மகத்தான ஆயிரவருட அரசாட்சி, ஒரு பெரிய உயிர்த்தெழுதல் இருக்கிறது. அந்த நாளில் நாம் திரும்பவும் ஜீவனோடே வருவோம், காரணம் நாம் நித்திய ஜீவனை உடையவர்களாய்யிருக்கிறோம். நாம் அதை வார்த்தையின் வழியில் அறிந்து கொள்கிறோம். நமக்கு இன்னும் நேரமிருக்குமானால், உங்களுக்கு தெரியும், அது எப்படியென்று அறிந்து கொள்ள முடியும். அதை அநேக வழிகளில் நம்மால் அணுக முடியும். சில சமயங்களில் ஒரு நபரை பிடிப்பதற்காக நீங்கள்அநேக வழிகளை உபயோகிக்க வேண்டியதாயிருக்கிறது. 67கடந்த வருடம் நான் அங்கு சென்றிருந்தேன்; ''திரும்பவும் அந்த வயதான மனிதனுடைய இடத்திற்கு சென்று வேட்டையாடலாமே“ என்று நினைத்தேன். அந்த இடத்திற்குவண்டியை ஓட்டிச் சென்றபோது, அங்குசுற்றும் முற்றும் எவ்விடத்திலும் களைகள் (Weeds) வளர்ந்திருந்தன. அங்கே ஒரு வயதான மூதாட்டி முற்றத்தில் உட்கார்ந்தபடி அந்த மரத்திலிருந்து பறித்த ஆப்பிளின் தோலை உறித்துக்கொண்டிருந்தாள். நான் அவளிடத்தில் நடந்து சென்று, ''எப்படி இருக்கிறீர்கள்”, என்று விசாரித்தேன். அவளும், ''ஐயா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்“, என்றாள். ''இங்கே உள்ளே வருவதற்கு முன் பெரிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருப்பதை கவனித்தேன். எனவே இங்கே நான் அணில் வேட்டையாட முடியுமா என்று ஆச்சரியப்படுகிறேன்“, என்றேன். அவள், ஐயா,என்னுடைய கணவர் ஜீவனோடு இருந்தபோது, அவர் மிகவும் முரணான (விசித்திரமான) நபராக இருந்தார். அவர்தான் இந்த அறிவிப்பு கம்பங்களை நட்டு வைத்தார். அங்கே கெண்டக்கி, லூயி வில்லில் வசிக்கிற பையன்களை நான் அறிவேன், அவர்கள் தான் இங்கே வந்து வேட்டையாடுவார்கள்“, என்றாள். நான், ''நான் அதை அறிவேன். அவரும் அதைப்பற்றி என்னிடத்தில் கூறியிருக்கிறார். அவரை நான் பார்க்கலாமா?“ என்றேன். அவள், ''அவர் கடந்து போய்விட்டார்“, என்றாள். நான், நிச்சயமாகசொல்கிறீர்களா?“ என்றேன். 'ஆம்“. நான், ''ஆமாம், அவர் ஜீவிக்கும் போது நாங்கள் வேட்டையாடலாம் என்று என்னிடத்தில் கூறியிருந்தார்“,என்றேன். அவள், ''நீங்கள் யார்“, என்றாள். நான், ''நான் சகோதரன் பிரான்ஹாம்“, என்றேன். அதைக் கேட்டவுடன், அவள் தான் கையில் வைத்திருந்த பாத்திரத்தை கீழே போட்டு, என்னுடைய கரங்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். தொடர்ந்து, ''சகோதரன் பிரான்ஹாம், அவர்இப்பொழுது மகிமையில் இருக்கிறார். அவர் அந்த மணிநேரமுதல் (மனம்மாறின முதற்கொண்டு) ஒரு வைராக்கியமான கிறிஸ்தவ ஜீவியத்தை ஜீவித்தார்“, என்றாள். நான், ''நீங்கள் அந்த மரத்திலிருந்து வந்த ஆப்பிளின் தோலை சீவிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த மரத்திலிருந்து திரும்பவும் ஆப்பிள்கள் வந்திருக்கின்றன, இல்லையா? அதேபோல என்றாவது ஒரு நாள் அந்த மகத்தான உயிர்த்தெழுதலின்போது அவர் திரும்பவும் வருவார்“, என்றேன். 68எனவே, சகோதரனே, சகோதரியே நாம் நேசிக்கிறவர்கள், அதாவது கிறிஸ்துவானவர் எவர்களுக்காக மரித்தாரோ அவர்கள் இந்த ஜீவனைவிட்டு, நித்தியஜீவனற்றவர்களாக மரித்துப் போவதை நாம் விட்டுவிட முடியாது. உயிர்த்தெழுதலின்போது அவர்கள்மீண்டும் உயிர்த்தெழக்கூடிய அந்த இடத்திற்கு வருவதற்கு நம்மால் முடிந்த யாவற்றையும் நாம் செய்வோமாக. ''ஜீவமார்க்கத்தை நீர் எனக்கு தெரியப்படுத்துவீர்“. சகோதரர்களாகிய நீங்கள் அதை உங்கள் கூட்டத்தாருக்கு செய்ய முடியும், ஏனெனில் நீங்கள் படித்த ஊழியக்காரர்களும், வேதபண்டிதர்களுமாய் இருக்கிறீர்கள். ஆனால் அவ்விதமான திறன் என்னிடத்தில் இல்லை. எனக்கு அப்படிப்பட்ட திறன் இல்லை, ஆனால் எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு சிறியவரத்தைக் கொண்டு, இவ்விதமாக ஒரு குறிப்பிட்ட நிலைக்குச்சென்று மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும், அவர்கள்என்ன செய்கிறார்கள் என்றும், அவர்கள் என்ன செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கிறேன். அது எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு எளிமையான ஊழியமாயிருக்கிறது. அவருடைய மக்களை அந்த கரைக்கு கொண்டு வரும்படிக்கு நான் பயன்படுத்தும்படிதேவன் எனக்கு அனுமதித்த ஒரு சிறிய மார்க்கமாயிருக்கிறது. இப்பொழுது, என்னுடையதை நான் உங்களோடு சேர்த்துக் கொள்கிறேன். மக்கள் தேவனுடைய வழியை கண்டுபிடிக்கும்படி நாம் மக்களுக்கு ஜீவமார்க்கத்தை காண்பிப்போமாக. எனவே இங்கே ''தேவனுடைய சமூகத்தில் களிப்பு (Joy) உண்டாயிருக்கும்“ என்றுஅவர் கூறியிருக்கிறார். நாம் இந்த பாதையில் கடந்து செல்லும்போது,இருபக்கத்திலும் தேவனைப்பற்றி தெரிவிக்கிற மரங்கள், இலைகளின் உயிர்த்தெழுதல் மற்றும் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது நமக்கு களிப்பு உண்டாயிருக்கும். எனவே நாம் செய்கிற அல்லது பேசுகிறஒவ்வொரு காரியத்திலும் தேவனை அறிவிக்கக் கூடிய தேவனுடைய சிருஷ்டிகளாக இருப்போமாக. அவருடைய மகிமைக்காக அது அவ்விதமாய் பிரகாசிக்கட்டும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை சற்று வணங்குவோமாக. 69கர்த்தராகிய இயேசுவே, மந்தையின் மகத்தான மேய்ப்பனே, நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்,காரணம் தேவனே, நீர் எனக்கு ஜீவமார்க்கத்தை தெரியப்படுத்தினீர். இந்த மேலான பழமை வாய்ந்த பெருவழியில் நடப்பதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். இன்றைக்கு இந்த சகோதரர்களோடு கூட என் கரங்களை சேர்த்துக் கொண்டு இந்த பெருவழியின் பக்கத்தில் நின்றவண்ணம், நீர் மரித்துக் கொண்டிருக்கிற இந்த பெரும் திரளான மானிடவர்க்கத்திற்க்காக எங்களுக்கு நீர் கொடுத்த எல்லா தாலந்துகளையும் கொண்டு நாங்கள் உரத்த சத்தத்தை எழுப்பும்படி செய்ததற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். தேவனே, எங்களுக்கு உதவி செய்யும், தயவு செய்து நீர் அதை செய்வீரா? பாவிகளும் அவிசுவாசிகளுமான இவர்கள் தேவனுடைய வழியை கண்டு, தேவனுடையசந்தோஷத்தில் பிரவேசிக்கும்படிக்கு, இந்த மக்களுக்கு நான் பாவி என்ற உணர்வை (Conviction) கொண்டுவருமளவுக்கு எங்கள் ஒவ்வொருவரின் ஜீவியமும் ஒரு மரமாகவோ அல்லது அவ்விதமான ஏதோ ஒன்றாகவோ இருக்கக் கடவது. இதை அளியும், பிதாவே. நாங்கள் ஏறெடுக்கிற இந்த பெலவீனமான பிரயாசத்தில் எங்களை ஆசீர்வதியும். இந்த பிரமாண்டமான காலை உணவிற்காகவும் நாங்கள் உமக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், பிதாவேஎங்களுடைய ஆத்துமாக்களும், எங்களுடையசரீரங்களும் தேவனுடைய நன்மையினால் போஷிக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் உணர்கிறோம். இப்பொழுது நாங்கள் தொடர்ந்து இன்னும் கூட்டத்தில் பங்கு கொள்ளும்போது எங்களோடு இருந்திடும், மேலும்பாவிகள் இரட்சிக்கப்பட்டு துரிதமாக அவர்கள் பீடத்தண்டை வரும்படி ஏதோ காரியமானது நிகழும்படி இன்று இரவு எங்களோடு இருந்திடும். வியாதியஸ்தர்கள் சுகத்தை பெற்றுக் கொள்வார்களாக.பரிசுத்த ஆவியை பெறாதவர்கள் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெறுவார்களாக. இதை அளியும், கர்த்தாவே. எங்களையும் உம்மிடத்தில் ஒப்புக் கொடுக்கிறோம். எங்கள் ஜெபத்தையும், எங்கள் விசுவாசத்தையும், நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உம்முடையபீடத்தண்டைக்கு வந்து அதன் மேல் கிடத்துகிறோம். மற்றும் அதை உம்மிடத்திற்கு அனுப்புகிறோம், கர்த்தாவே‚ இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்களைஏற்றுக் கொள்ளும். ஆமென். 70என்னுடைய சகோதரர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நாம் வழக்கமாக செய்கிறபடி, சகோதரர்களில் ஒருவர் வந்து சபையை அல்லது கூட்டத்தை முடித்து வைப்பார் என்று நான் யூகிக்கிறேன். யார் வரப்போகிறார் என்று முடிவு செய்யும்போது, நான் இதை சொல்ல விரும்புகிறேன்; உங்களுடைய நிறைவான வருகைக்காக நான்உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்னை மன்னிக்கவும். நான் உங்களை சரியாக நடுப்பகல் வரைக்கும் காத்திருக்க வைத்துவிட்டேன், என்னுடைய கைக் கடிகாரத்தில் கிட்டத்தட்ட பதினோறு மணி ஐந்து நிமிடம் ஆகிவிட்டது. நான் உங்களிடத்தில் உட்கார்ந்து,வெளியே ஊழியகளத்தில் நான் பார்த்த தேவன்செய்த மகத்தான காரியங்களை; பெரிதும், மகத்தான காரியங்களை குறித்து பேசவேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் ஒருபோதும் பயப்பட வேண்டாம். இதைமட்டும் நினைவுகூறுங்கள்; தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறபடியால், தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை காத்துக்கொள்ள வேண்டியவராயிருக்கிறார். அவர் நிச்சயமாக தம்முடைய வாக்குத்தத்தத்தை காத்துக் கொள்வார். இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் பார்டர்ஸ்.